மேலும் அறிய
கோதுமை மாவு இருக்கா?சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!
கோதுமை பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

கோதுமை பிடி கொழுக்கட்டை
1/5

கோதுமை மாவு இருந்தால் அதை வைத்து ஆரோக்கியமான உணவு செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ், காலை என செய்து சாப்பிடலாம். காரம், இனிப்பு என இரண்டு வகைகளாக செய்யலாம்.
2/5

தேவையான பொருட்கள்: வறுத்த கோதுமை மாவு- 250 கிராம் வெல்லம் 150 கிராம் கடலைப்பருப்பு 50 கிராம் தேங்காய் மூடி-1 ஏலக்காய்-5 உப்பு - தேவையான அளவு
3/5

செய்முறை: கோதுமை மாவில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
4/5

தேங்காயை துருவியும், ஏலக்காயை பொடித்தும் வைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் தண்ணீர் கலந்து பாகு பதத்தில் காய்ச்சி, அத்துடன் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, தேங் காய்த் துருவல், பொடித்த ஏலக் காய் இவற்றை கலந்து பூரணமாக தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
5/5

தயாராக வைத்துள்ள மாவை தட்டி, நடுவில் பூரணத்தை வைத்து கையால் கொழுக்கட்டையாக பிடித்து, ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். இதுவே 'கோதுமை பிடி கொழுக்கட்டை'. சாப்பிட சுவை யாக இருக்கும்.
Published at : 22 Oct 2024 12:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement