சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
Hari hará veera mallu movie review : பவன் கல்யாண் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

ஹரி ஹர வீர மல்லு
ஆந்திர துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிஹரவீர மல்லு. க்ரிஷ் ஜகர்லமுடி , ஜோதி கிருஷ்ணா இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். எம்.எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல்வேறு காரணங்களால் நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்த இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது . ரசிகர்களின் 5 ஆண்டு காத்திருப்பை பலனளித்ததா? ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்
ஹரிஹர வீர மல்லு திரைப்பட விமர்சனம்
1650 ஆம் ஆண்டில் நடக்கிறது படத்தின் கதை. முகலாயர்களின் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டுவர வீர மல்லு (பவன் கல்யாண்) என்கிற வரலாற்று நாயகன் செல்கிறான். இந்த பயணத்தில் அவன் பல சாகசங்களை எதிர்கொண்டு தர்மத்திற்காக அவர் போராடுவதை பீரியல் ஆக்ஷன் படமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்
மிக சுவாரஸ்யமான கதையோடும் தொடங்கும் கதை . ஆனால் இந்த பாகத்தில் வீர மல்லுவின் சாகசங்கள் மட்டுமே மையமாக சொல்லப்படுகின்றன. முக்கியமான போர் காட்சிகளுக்காக ரசிகர்கள் அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க வேண்டும். பவன் கல்யாண் ரசிகர்கள் இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம், ஆனால் மற்ற தரப்பு ரசிகரகளுக்கு படத்தின் நிறைய குறைகள் தெரியலாம். பவன் கல்யாணின் நடிப்பும் , ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் பிளஸ் என சொல்லலாம். ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பலான திரைக்கதை , மிக சுமாரான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் . டப்பிங் பிரச்சனைகள் என படத்தை அவசரத்தில் முடித்து வெளியிட்ட குறைகள் நம் கண்முன் தெரிகின்றன. வரலாற்று நாயகன் ஒருவனின் கதையை சொல்வதை விட படம் ஒரு குறிப்பிட தரப்பினரை எதிரிகளாக சித்தரிப்பதையே மைய நோக்கமாக கொண்டுள்ளது ஹரி ஹர வீர மல்லு திரைப்படம்.





















