மேலும் அறிய
Banana Cake: வாழைப்பழ கேக் - இப்படி செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Banana Cake: உங்க அன்பிற்குரியவர்களுக்கு பிறந்தநாள் வருகிறதா? கடைகளில் கேக் வாங்கி கொடுப்பதை விட இந்த வாழைப்பழ கேக்கை வீட்டிலேயே செய்து அசத்துங்க.

வாழைப்பழ கேக்
1/6

தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் - 4 , சர்க்கரை - 1 & 1/4 கப், வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி , வெண்ணிலா எசன்ஸ்- 2 தேக்கரண்டி, மைதா - 2 & 1/2 கப், இலவங்கப்பட்டை தூள் - 2 தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி, உப்பு, பால் - 1/2 கப், தயிர் - 1/4 கப், வால்நட்ஸ், வறுத்த முந்திரி பருப்புகள்.
2/6

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அடுத்தது சர்க்கரை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3/6

அடுத்தது இரண்டு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது மற்றொரு பாத்திரத்தில் மைதா, இலவங்கப்பட்டை தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு கலந்து கொள்ளவும்.
5/6

அடுத்தது மைதாவில் கலவையில் வாழைப்பழ கலவையை சேர்க்கவும். அடுத்தது பால் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அடுத்தது பேக் செய்ய ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி சிறிதளவு மைதா மாவு தடவி எடுத்துக் கொள்ளவும்.
6/6

அந்த பாத்திரத்தில் வாழைப்பழ கலவை, வால்நுட்ஸ், வறுத்த முந்திரி சேர்க்கவும். அடுத்தது குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் மூடிய நிலையில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான வாழைப்பழ கேக் தயார்.
Published at : 18 Aug 2024 09:24 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement