மேலும் அறிய
Beetroot Idli Fry Recipe: ஹெல்தியான பீட்ரூட் இட்லி ஃப்ரை எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!
Beetroot Idli Fry Recipe: பீட்ரூட் இட்லி ஃப்ரை செய்வது எப்படி என்று காணலாம்.

பீட்ரூட் இட்லி ஃப்ரை
1/5

பீட்ரூட் இட்லி ஃப்ரை செய்ய அரிசி, உளுந்தை முதலில் ஊற வைக்க வேண்டும். அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக சுத்தப்படுத்தி 6-7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதோடு சிறிதளவு வெந்தயம் ஊற வைக்க வேண்டும். இவற்றை நன்றாக இட்லி மாவு போல அரைத்து எடுக்க வேண்டும். 7 மணி நேரத்திற்கு பிறகு பீட்ரூட் அரைத்து இந்த மாவோடு சேர்க்க வேண்டும்.
2/5

இப்போது, 2-3 பீட்ரூட்டை நன்றாக தோல் நீக்கி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
3/5

தேவையெனில் தண்ணீர் சேர்த்துகொள்ளலாம். இப்போது இட்லி பானையில் இந்த மாவில் இட்லி ஊற்றி வைக்கவும். பீட்ரூட் இட்லி வெந்ததும் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4/5

அடுத்து, ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கவும்.
5/5

இந்த சமயத்தில், பீட்ரூட் இட்லி துண்டுகளை அதோடு சேர்த்து நன்றாக மொறுமொறுப்பான இருக்கும்வரை வதக்கவும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் பீட்ரூட் இட்லி ஃப்ரை தயார். இதற்கு தேங்காய், வேர்க்கடலை சட்னி உடன் சாப்பிடலாம்
Published at : 19 Jul 2024 06:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement