சூர்யா - ஜோதிகாவின் ரொமான்டிக் டூர்.. எந்த நாடு தெரியுமா.. அழகான நாட்களாக இருக்கிறதாம்
சூர்யா - ஜோதிகா தம்பதி ஜோடியாக வெகேஷன் சென்றிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா ரெட்ரோ படத்தின் ரிலீஸை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் ஜாலியாக டூர் சென்றிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிவாசல் எப்போது?
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் சாதனை படைத்தது. இருப்பினும் இப்படம் ரசிகர்களை கவரவில்லை என்பதே பிரதானமாக இருந்தது. சூர்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும் அடுத்தடுத்து படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதேநேரத்தில் வாடிவாசல் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து வெற்றிமாறன் எதுவும் கூறாமல் இருப்பது ஏமாற்றம் தான்.
காதல் ஜோடி
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் சூர்யா - ஜோதிகா படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் குடும்பத்திற்கான நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். சூர்யா ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் ஜோதிகா சோலோ ஹீரோயினாக அசத்தி வருகிறார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டை பெற்றுள்ளார். குறிப்பாக பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா எங்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.
பட்டப்படிப்பை முடித்த மகள்
சமீபத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியா தனது பட்டப்படிப்பை முடித்தார். இதற்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில், குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினருடம் தியா எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தங்களது குடும்பத்தினருடன் சூர்யா டூர் சென்றிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
குடும்பத்துடன் ஜாலி டூர்
சூர்யா - ஜோதிகா இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள seychelles என்கிற நாட்டிற்கு தங்களது விடுமுறையை கொண்டாட Vacation சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் அங்கு ஜாலியாக சுற்றித் திரியும் வீடியோவை ஜோதிகா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழகான நாட்களை எங்களால் மறக்க முடியாது அழகான நிமிடங்களை சேமித்து வைத்திருப்பதாக ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram





















