தேனி இளைஞர்களே! தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 8000+ காலிப் பணியிடங்கள்! இலவசப் பயிற்சி & உதவித்தொகை
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 125க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலையில்லா இளைஞர்களின் நலன் கருதி, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தேனி மாவட்டத்தில் நடத்துகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி தனியார் நிறுவனத்தில் வேலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முகாமில் எவ்வித கட்டணமும் யாருக்கும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிப்போரோ, வேலை தேடுபவரோ எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சிறப்பு அம்சங்களில் இது முக்கியமானது. தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 125க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரையிலான 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் மற்றும் நர்சிங் படிப்புகளை முடித்தவர்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தேனி வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமுக்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண்: 9894889794. தேனியில் நடக்கும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய முகவரியின் மூலம் அல்லது இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.





















