மேலும் அறிய
Viduthalai Movie Review : சூரி - வெற்றி மாறன் காம்போ மக்களை பூர்த்தி செய்ததா..விடுதலை படத்தின் குட்டி விமர்சனம்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. அந்த படத்தின் சுருக்கமான விமர்சனத்தை இங்கு காணலாம்!

விடுதலை பட விமர்சனம்
1/7

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. அந்த படத்தின் சுருக்கமான விமர்சனத்தை இங்கு காணலாம்!
2/7

1987 ஆம் ஆண்டு நடக்கும் கதையாக படம் அமைந்துள்ளது.வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. அதனை எதிர்த்து போராடும் மக்கள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். ஊர்மக்களுக்கு ஆதரவாக மக்கள் படை எனும் புரட்சியாளர்களும் செயல்படுகின்றனர்.
3/7

இதற்கிடையில் அந்த ஊருக்கு கடைநிலை காவலராக சூரி பணியில் சேர்கிறார் . அவர் ஊர்மக்களுக்கு உதவி உயரதிகாரியின் பகையை சம்பாதித்து கொள்கிறார். விசாரணை நடத்த டிஎஸ்பி கௌதம் மேனன் இந்த கிராமத்திற்கு வருகிறார். அவரின் விசாரணையில் நீண்ட நாள்களாக தேடப்பட்டு வரும் மக்கள் படையின் தலைவர் முகம் வெளிவருகிறது.
4/7

ஊர் மக்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையைத் தடுக்க சூரி என்ன செய்கிறார், மக்கள் படையின் தலைவர் பிடிபட்டாரா... அதன் பின்னர் நடப்பது என்ன என்பது தான் மீதிக்கதை.
5/7

படத்தின் தொடக்கம் முதல் சூரி கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாகப் பொருந்தி கதையைத் தாங்கி நம்மை அழைத்துச் செல்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதாரத்துக்கு ரசிகர்கள் தயாராகும் வகையில் லீட் கொடுத்து படத்தை முடித்திருப்பது எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்துள்ளது.
6/7

அனைத்து வெற்றிமாறன் படங்களிலும் இருக்கும் அதே பிரச்னை தான், பட வசனங்கள் கதாபாத்திரங்களின் உதட்டசைவில் ஒட்டாததால் டப்பிங் படம் பார்த்த சலிப்பை சில இடங்களில் ஏற்படுத்துகிறது. விறுவிறுவென ஜெட் வேகத்தில் முதல் பாதி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி சட்டென்று முடிந்தது போன்ற அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7/7

மொத்தத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் மீதான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் மற்றும் குழுவினர் கச்சிதமாகப் பூர்த்தி செய்து, அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர். வெற்றிமாறன் தான் ஏன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்பதை மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.
Published at : 31 Mar 2023 05:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion