Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தங்களது வெற்றிகரமான படைப்பான XUV3XO கார்களுக்கு ரூபாய் 89 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்திய சாலைகளில் கம்பீரமாக அணிவரும் கார்களில் முதன்மையானதாக இருப்பது மஹிந்திரா. டாடா, ஹுண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு நிகரான விற்பனையையும், தரத்தையும் கொண்ட காராக மஹிந்திரா திகழ்கிறது. எஸ்யூவி கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
மஹிந்திராவின் படைப்புகளில் முக்கியமானது XUV 3XO. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காருக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் அதிகபட்சமாக ரூபாய் 89 ஆயிரம் வரை தள்ளுபடி தந்துள்ளது. எந்த மாடலுக்கு எவ்வளவு சலுகை என்பதை கீழே காணலாம்.
1. XUV3XO Diesel (AX7 L) - மொத்தமாக ரூ. 89 ஆயிரம்
2. XUV3XO Petrol (AX7 L) - மொத்தமாக ரூ. 84 ஆயிரம்
3. XUV3XO Petrol (AX7) - மொத்தமாக ரூ.64 ஆயிரம்
4. XUV3XO Diesel (MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX7, AX5) - ரூ. 69 ஆயிரம்
5. XUV3XO Petrol (AX5 L) - மொத்தமாக ரூபாய் 44 ஆயிரம்
குறைந்தபட்சமாக ரூபாய் 44 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 89 ஆயிரம் வரை இந்த தள்ளுபடியை மஹிந்திரா அறிவித்துள்ளது.
1. XUV3XO Diesel (AX7 L):
இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளித்துள்ளனர். எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 25 ஆயிரம் அறிவித்துள்ளனர். இதர சலுகைகளுடன் சேர்த்து மொத்தம் ரூபாய் 89 ஆயிரம் அறிவித்துள்ளனர்.
2.XUV3XO Petrol (AX7 L)
பெட்ரோலில் ஓடும் இந்த XUV3XO (AX7 L) காருக்கு ரொக்கமாக ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். எக்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 30 ஆயிரம் அறிவித்துள்ளனர். மற்ற சலுகைகளுடன் சேர்த்து ரூபாய் 84 ஆயிரம் அறிவித்துள்ளனர்.
3. XUV3XO Petrol (AX7)
இந்த XUV3XO AX7 காரும் பெட்ரோலில் ஓடும் திறன் கொண்டது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 35 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளனர். எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 30 ஆயிரம் அறிவித்துள்ளனர். மற்ற சலுகைகளுடன் சேர்த்து மொத்தமாக ரூபாய் 64 ஆயிரம் இந்த காருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளனர்.
4. XUV3XO Diesel (MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX7, AX5)
XUV3XO ரக காரில் டீசலில் ஓடும் MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX7 மற்றும் AX5 வேரியண்ட்களுக்கு மொத்தமாக ரூபாய் 69 ஆயிரம் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூபாய் 30 ஆயிரமும், எக்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 25 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. XUV3XO Petrol (AX5 L)
பெட்ரோலில் ஓடும் இந்த XUV3XO AX5 L மாடல் காருக்கு மொத்தம் 44 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூபாய் 5 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 30 ஆயிரமும் சலுகையாக அறிவித்துள்ளனர்.
மஹிந்திரா சலுகை அறிவித்துள்ள XUV3XO காரின் தொடக்கவிலை ரூபாய் 7.99 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 15.79 லட்சம் வரை விற்கப்படுகிறது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பெரிய அகலமான திரை என பல்வேறு சிறப்பம்சங்களுடன், மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் வசதியுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் என இரண்டிலும் ஓடும் வகையிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.





















