Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review in Tamil : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

கூலி திரைப்பட விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் பெரியளவில் கமர்சியல் வெற்றியை பார்க்காத நிலையில் 1000 கோடி என்கிற பாக்ஸ் ஆபிஸ் கனவை சுமந்து வெளியாகியுள்ளது கூலி. கூலி படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணி ரசிகர்களை கவர்ந்ததா. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கனவை கூலி படம் நிறைவேற்றுமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்
கூலி முதல் பாதி விமர்சனம்
கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு வெறித்தனமான ஒரு அறிமுக காட்சியை உருவாக்கியிருக்கிறார். லியோ படத்தில் வந்தது போல் இப்படத்தில் ரஜினிக்கு சிறப்பு டைட்டில் கார் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார்போல் அனிருத் இசையை செதுக்கியிருக்கிறார். கதையில் இடம்பெற்றுள்ள அத்தனை கதாபாத்திரங்களுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுத்து மிக சாமர்த்தியமான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒருபக்கம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானாலு இன்னொரு பக்கம் படத்தின் முதல் காட்சிக்கே நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோவை விட கூலி சுமாராக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
முதல் பாதியில் ரஜினிகாந்த் பயங்கர எனர்ஜெடிக்கான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாகர்ஜூனா தனது ஸ்டைலிஷான நடிப்பால் கவர்கிறார். 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கின்றன. இடைவேளைக் காட்சியில் வழக்கமாக தன்னுடைய ஸ்டைலில் ஒரு விண்டேஜ் பாடலை வைத்து அமர்க்களம் செய்திருக்கிறார் லோகேஷ்
#Coolie a very clever film with so many layers and characters with equal importance.
— Kousik Karthikeyan (@kousik23) August 14, 2025
Loki cooked full meals for Thalaivar fans. Extracted best for and from #Thalaivar.
A FULL BLAST RAJINI PADAM🔥
Love you Thalaiva, Forever grateful Loki and Ani 🔥🤘🏽❤️#CoolieFDFS…





















