மேலும் அறிய

மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!

பி.எல்.சந்தோஷ் சென்னை வந்த போது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக பாஜகவினர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்த போது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக பாஜகவினர் முன்வைத்த நிலையில், பி.எல்.சந்தோஷ் நிராகரித்ததாகவும் இதனை அறிந்த ஓபிஎஸ் அப்செட்டானதாகவும் தற்போது அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டுவருவதாகவும் சொல்கின்றனர்.

நிராகரித்த பி.எல்.சந்தோஷ்

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு, பாஜக தனக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தமிழ் நாடு வந்த போது அவரை சந்திக்க நேரம் கேட்டும் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் டெல்லி பாஜக தலைகள் அடிக்கடி ஓ.பன்னீர்செல்வத்தை  நேரடியாகவே அழைத்து பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது அவரை திட்டமிட்டே பாஜக ஒதுக்கியுள்ளது என்று ஓபன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சமாதன பேச்சுவார்த்தையில் அண்ணாமலை

இச்சூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது இல்லத்திலேயே சந்தித்தித்து பேசினார் ஓபிஎஸ். இதனால் அவர் திமுக கூட்டணியில் இணைய உள்ளார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால்,அவரை சமாதனபடுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை தொடங்கியது. 

இதனிடையே சென்னை வந்த பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷிடம் தமிழக பாஜகவினர் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், பி.எல்.சந்தோஷ் அதனை நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ஓபிஎஸ் கடும் அதிருப்திக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் தான் தற்போது அண்ணாமலையை வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை  சமாதனப்படுத்தும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சகவாசமே வேண்டாம்

மறுபுறம் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள் இனி அவர்களின் சகவாசமே வேண்டாம் என்று திமுக ஓபிஎஸ்-யிடம் கூறிவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே குழப்பிப்போய் இருக்கும் ஓபிஎஸ் மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு காத்திருப்பதா இல்லை திமுக பக்கமே ஒதுங்கி விடலாம என்ற யோசனையில் இருப்பதக சொல்கின்றனர் ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget