Pakistan : எண்ணெய் ஆலைக்குள் புகுந்த பயங்கரவாதிகள்... 6 பேர் சுட்டுக் கொலை... பாகிஸ்தானில் பயங்கரம்...!
பாகிஸ்தானில் எண்ணெய் ஆலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan : பாகிஸ்தானில் எண்ணெய் ஆலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலிபான்கள்:
பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் அரசுடனான ஒரு மாத கால போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மசூதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கிடையில் பாகிஸ்தானின் முன்னாள் தலைநகரான கராச்சி அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக திகழ்கிறது. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் கராச்சி காவல் நிலையம் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
6 பேர் சுட்டுக் கொலை
அதனை தொடர்ந்து தற்பேது, வடமேற்கு பாகிஸ்தான் ஹங்கு மாவட்டத்தில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் ஆலையில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நுழைந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆலைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கல் நடத்தியுள்ளனர். முதலில் அரை டஜன் கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தாக்கினர்.
இதனை அடுத்து, ராணுவத்தினர் ஆலைக்குள் நுழைந்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஆறு தீவிரவாதிகள், 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆனால் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகளில் மூவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் எண்ணெய் ஆலையின் கட்டடங்கள் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க