மேலும் அறிய

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாபாரிகளை கடுமையாக தொந்தரவு செய்கின்றனர் - விக்கிரமராஜா

அதிகாரிகள் வியாபாரிகளை கனிவோடு பார்க்கவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் டிஜிபியை சந்தித்து புகார் கொடுப்போம் என்பதனை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்

வள்ளியூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பில் வணிகர்கள் எழுச்சி மாநாடு நடந்தது. வள்ளியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கார்த்தீசன், மாநில இணை செயலாளர்கள் தங்கையா கணேசன், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராஜன் மாநாட்டு தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், வணிகவரித்துறையின் டெஸ்ட் பர்சஸ் மற்றும் செஸ் வரி விதிப்பு நீக்க வேண்டும். வள்ளியூர் பேருந்து நிலையம் மற்றும் சந்தை கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வள்ளியூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். வள்ளியூர் கேசவனேரி சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். ஏர்வாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டும். களக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உட்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்ததாவது, "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே ஐந்தாம் தேதி மாநில அளவில் நடக்கும் மாநாட்டிற்கு முன்னோட்டமாக திருநெல்வேலி நடக்கும் இந்த மாநாடு அமைந்துள்ளது. ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டிற்கு இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை கடுமையாக தொந்தரவு செய்து வருகிறார்கள். குறிப்பாக லைசென்ஸ் முறை என்பது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் அபராதம் என்ற பெயரில் வசூலிப்பதை கட்டாயமாக திரும்ப பெற வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பிக்கும் முறையே மாற்றி ஓர் ஆண்டாக மாற்றி இருப்பது அதையும் திரும்ப பெற வேண்டும். நகை கடைகளில் வெளியூரிலிருந்து யாராவது ஒரு திருடர்கள் திருடி விட்டு இந்த கடை தான் என்று கையை காட்டினால் அதை முறையாக விசாரிக்காமல் போலீசார் ஒரு அணுகுமுறையோடு செய்யாமல் அத்துமீறலோடு நடந்து கொள்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற அதிகாரிகள் வியாபாரிகளை கனிவோடு பார்க்கவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் டிஜிபியை சந்தித்து புகார் கொடுப்போம் என்பதனை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மிABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.