மேலும் அறிய

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; 60 நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை - எஸ்பி உறுதி

முக்கிய குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியில் பட்டதாரி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் கூறுகையில், 60 நாட்களில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகத்தை சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக இந்த இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25)  என்பவர் அந்த இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

காதலன் அழைப்பதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு அந்த இளம் பெண் சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனால் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கவிதாசன் உட்பட  நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

இதில் இளம்பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரியவந்தது. தொடர்ந்து அந்த இளம்பெண் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ் ஆகியோர் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கவிதாசன் மீது கடந்த 2020ம் ஆண்டு விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல பிரவீன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் சிறார் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற மூவரும் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இவ்வழக்கு குறித்து நேற்று இரவு மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது: “ பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்முறை வழக்கில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை 60 நாட்களில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும்.

முக்கிய குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் அரசியல் பின்னணியில் உள்ளார்களா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
ஓடவோ, ஒளியவோ முடியாது: ஆசிரியர்களுக்கு மீண்டும் வரும் பயோமெட்ரிக் பதிவு; எப்போது?
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Irfan Controversy : மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Embed widget