மேலும் அறிய

மொஹரம் பண்டிகை: கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முதல் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மொஹரம் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தஞ்சாவூர்: மொஹரம் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜானுக்கு அடுத்த படியாக மிக புனிதமான பண்டிகையாக கருதப்படுவது மொஹரம் பண்டிகையாகும். இது புதிய இஸ்லாமிய ஆண்டு, இஸ்லாமிய மாதத்தின் துவக்க நாளாக இருந்தாலும் துக்க நாளாகவே இது கடைபிடிக்கப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய காலண்டர் கணிக்கப்படுகிறது. புதிய பிறை தென்படும் நாளையே புதிய மாதத்தின் தொடக்கமாக வைத்து கணக்கிடுகிறார்கள். மொஹரம் என்பது இஸ்லாமிய காலண்டரில் முதல் மாதமாகும்.

புதிய இஸ்லாமிய ஆண்டின் துவக்கமான இந்த மாதத்தில் 9 மற்றும் 10 நாளில் இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பது வழக்கம். இதை புனித மாதம் என்றும், அல்லாஹ்வின் மாதம் என்றும் இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். மொஹரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு வைத்து, சிறப்பு தொழுகைகள் நடத்தியும்,  ஊர்வலங்கள் நடத்தியும், துக்கம் அனுஷ்டித்தும் மொஹரம் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.

மொஹரம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மொஹரம் பண்டிகை: கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முதல் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடு துறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இயக்கப்படவுள்ளன. இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணி அமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget