உங்கள் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? இது நடக்கலாம்..!
உங்கள் கனவில் பாம்பு வந்தால் அதற்கு என்ன பலன்கள்? நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதை கீழே காணலாம்.

மனிதர்களுக்கு கனவு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும். கனவில் நாம் காணும் காட்சிகளுக்கு ஒவ்வொரு வித பலன் இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பலருக்கும் கனவில் பாம்பு வருவதும் உண்டு. அவ்வாறு பாம்பு வந்தால் நல்லதும் நடக்கும், தீயதும் நடக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ஒருவருக்கு பாம்பு கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
1. பாம்பு படுக்கையில் விழந்தால் என்ன அர்த்தம்?
உங்களது படுக்கையில் பாம்பு விழுவது போல கனவு வந்தால் அது பாலியல் சிற்றின்பத்தையே குறிக்கிறது.
2. பாம்பு மட்டும் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?
ஒரு மனிதனின் கனவில் பாம்பு மட்டும் வந்தால் அது குலதெய்வ வழிபாட்டை குறிக்கிறது என்று அர்த்தம். அதாவது, குல தெய்வ கோயிலுக்கு செல்ல அறிவுறுத்துவதாகவும், நீண்ட நாட்களாக செய்யாத நேர்த்திக்கடனை செய்ய வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
3. பாம்பு உங்களை விரட்டினால் என்ன நடக்கும்?
கனவில் பாம்பு உங்களை விரட்டினால் உங்களுக்கு வறுமை உண்டாக வாய்ப்பு இருப்பதாக அர்த்தம். அதாவது, பணச்சிக்கல், பொருளாதார நெருக்கடி ஏற்படப்போகிறது என்று அர்த்தம். இதில் இருந்து விடுபட அருகில் இருக்கும் சிவன் கோயிலில் சென்று வழிபட வேண்டும்.
4. பாம்பு காலைச் சுற்றிக் கொள்வது போல வந்தால் என்ன அர்த்தம்?
பாம்பு உங்கள் காலைச் சுற்றிக் கொள்வது போல கனவு கண்டால் சனி பகவான் உங்களைப் பிடிக்கப்போகிறார் என்று அர்த்தம். சனி பகவானை வணங்குவது சிறப்பு ஆகும்.
5. பாம்பு உங்களை கடிப்பது போல கனவு கண்டால்?
பாம்பு நம்மை கடிப்பது போல கனவு கண்டால் அது நன்மையாகவே ஜோதிடத்தில் கருதப்படுகிறது. அதாவது, உங்களை இத்தனை நாட்கள் வாட்டி வதைத்து வந்த சிக்கல்கள், சிரமங்கள் அனைத்தும் விலகப்போகிறது என்று அர்த்தம். பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினையில் தத்தளிப்பவர்களுக்கு கடன் தொல்லை நீங்கி புது வழி பிறக்கும்.
5. வீட்டில் இருந்து பாம்பு வெளியே சென்றால்?
உங்கள் வீட்டில் இருந்து பாம்பு யாரையும் ஏதும் செய்யாமல் வெளியேறுவது போல கனவு கண்டால், நீங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ள நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.
6. பாம்பு தலைக்கு மேல குடை பிடிப்பது போல வந்தால்?
உங்கள் கனவில் பாம்பு உங்கள் தலைக்கு மேலே எழுந்து குடை பிடிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் என்று அர்த்தம். இது கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது என்று பொருள்.
7. பாம்பு மேலே ஏறிச் செல்வது போல கனவு வந்தால்?
பாம்பு உங்கள் மீதோ அல்லது வேறு யார் மீதோ ஏறிச்செல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். அரசியல்வாதிகளுக்கு யோகம் அடிக்கப்போகிறது என்றும் அர்த்தம்.
8. பாம்பை கொல்வது போல கனவு வந்தால்?
உங்கள் கனவில் நீங்கள் பாம்பை கொல்வது போல கனவு வந்தால் உங்களுக்கு வரும் ஆபத்து விலகிவிட்டது என்று பொருள். ஆனாலும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பாம்பு உங்களை துரத்துவது போல கனவு வந்தால் பொருளாதார கஷ்டம் உண்டாகும் என்று அர்த்தம்.
9. பாம்பு உங்கள் கனவில் ஜோடியாக வந்தால்?
பாம்பு உங்கள் கனவில் ஜோடியாக வந்தால் உங்களுக்கு யாேகம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம். உங்களைச் சுற்றி உங்களுக்கு சாதகமான செயல்கள் நடக்கும் என்று அர்த்தம்.
10. பாம்பை கையில் பிடிப்பது போல கனவு வந்தால்?
நீங்கள் கையில் பிடித்திருப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்வில் பண வரவு, பதவி உயர்வு கிடைத்து செல்வ செழிப்புடன் வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம்.





















