மேலும் அறிய

வங்கிகள் & TNPSC தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களே! ஆட்சியரின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: உடனே பதிவு செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கிகள் மற்றும் அரசுப் பணியிடங்களுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நடத்தப்படும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலந்துகொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக, இந்திய ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவற்றின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :

ஸ்டேட் வங்கி மற்றும் ஐபிபிஎஸ் தேர்வு விவரங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் ஜீனியர் அஸ்ஸோசியேட் பதவிக்கான 6589 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள், https://sbi.co.in/web/careers/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 26, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

 

இதேபோல், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி அலுவலகங்களில் கஸ்டமர் சர்வீஸ் அஸ்ஸோசியேட் பதவிக்கான 10,277 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள், https://www.ibps.in/என்ற இணையதளத்தின் மூலம் ஆகஸ்ட் 21, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். இந்த தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்வுக்கான தயாரிப்பு முறைகள், தேவையான பாட நூல்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவை குறித்து வழிகாட்டுதல் வழங்குவதற்காக, ஒரு சிறப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஆகஸ்ட் 14, 2025, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2/2ஏ தேர்வு

இதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி 2/2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 13, 2025 ஆகும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் விரிவான தகவல்களைப் பெறலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அதன் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள், பூம்புகார் சாலை, பாலாஜி நகர், 2-வது தெருவில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

முன்பதிவு செய்ய அழைப்பு

மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள், இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள், 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் இளைஞர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget