ADMK : ’கையில் BLUE BAND அணிந்த அதிமுக நிர்வாகிகள்’ அட இதுதான் காரணமா..?
'எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தும் ‘பை, பை -ஸ்டாலின்’ என்ற சொல்லாடல் அதிமுகவினர் மத்தியில் மிகுந்த பிரபலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்த புதிய வியூகங்களை EPS வகுத்து வருகிறார்’

’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செல்லுமிடமெல்லாம் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி வருவதோடு, அவரது ‘பை, பை – ஸ்டாலின்’ என்ற வார்த்தை பிரயோகம் மக்கள் மத்தியில் வெகுவாக சென்றடைந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி எவ்வளவு நேரம் பேசினாலும் கடைசியில் அவர் சொல்லும் அந்த பை, பை ஸ்டாலின் என்ற சொல்லாடாலை பார்த்து ரசிப்பதற்காகவே அதிமுக நிர்வாகிகள் இப்போதெல்லாம் காத்திருக்கின்றார்கள்.
விஜயபாஸ்கரின் புதிய ஐடியா
புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது ஒரு புதிய ஐடியாவை உருவாக்கினார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு அது நடந்ததா இல்லையா? என்பதை குறிப்பிடும் வகையில் ஒரு சக்கரத்தை உருவாக்கி அசத்தினார் அவர்.
பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புது, புது ஐடியாக்கள், வீடியோக்கள் என திமுகவிற்கு எதிராக உருவாக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பிற்கு ஏற்ப அந்த பரப்புரை திட்டமிடப்பட்டு வருகிறது.
To the Young & energetic leaders of today and tomorrow....
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) August 11, 2025
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, அவர்களை வஞ்சித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்த அரசாக இருக்கிறது ஸ்டாலின் மாடல் அரசு.
இதற்கு எதிரான ஒரு Movement-ஆக, மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர்… pic.twitter.com/gUX0WMSsA5
கையில் நீல நிற பேட்ஜ் அணிந்த அதிமுகவினர் – ஏன் ?
இந்நிலையில் தற்போது, அதிமுக ஐ.டி விங் செயலாளர் ராஜ் சத்தியன் முன்னெடுப்பில், திமுக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் ஏற்படுத்தி தரவும் தவறிவிட்டது என்பதை மக்களுக்கும் இளைஞர்களுக்கும் உணர்த்தும் விதமாக கையில் இரட்டை இலை சின்னம் பொறித்த நீல நிற பட்டையை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் இந்த நீல நிற பேட்ஜை அதிமுக நிர்வாகிகள் அணிந்து அதற்கான காரணத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைகக் வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருக்கிறார். இதனையடுத்து இன்று அதிமுக ஐ.டி. விங் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் கையில் நீல நிற பேட்ஜ் அணிந்து திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.





















