Traffic Diversion: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா; மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்
பழைய பேருந்து நிலையம், போஸ் மைதானம், பேலஸ் தியேட்டர் அருகில், சி.எஸ்.ஐ பள்ளி வளாகம் என பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நாளை காலை நடைபெற உள்ள நிலையில், சேலம் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், சேலம் நிர்வாகத்துடன் இணைந்து, சேலம் மாநகர காவல் துறை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
போக்குவரத்து மாற்றங்களின் விபரம்:
அம்மாபேட்டை மார்க்கம்:-அம்மாபேட்டையில் இருந்து பட்டைகோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மாற்றாக:-
அம்மாபேட்டை - பட்டை கோவில்- கமலா மருத்துவமனை ஜங்சன் - டவுன் ரயில்வே ஜங்சன் - முள்ளுவாடிகேட் -மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் - கொரானா சிலை ரவுண்டானா - ஆற்றோரம் சாலை இடது பக்கம் திரும்பி பழையபேருந்து நிலையம் செல்லலாம். அல்லது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசிலை - அப்பா டிரேடர்ஸ்- பெட்ரோல் பங்க் - காந்தி சிலை - புலிக்குத்தி ஜங்சன் அப்சரா இறக்கம் கொரானா சிலை ரவுண்டானா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் - முள்ளுவாடி கேட் வழியாக செல்லலாம்.
அடிவாரம் - கன்னங்குறிச்சி - அஸ்தம்பட்டி மார்க்கம்:
அடிவாரம் - கன்னங்குறிச்சி - அஸ்தம்பட்டி முள்ளுவாடிகேட் - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் - திருவள்ளுவர் சிலை வழியாக பழையபேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
மாற்றாக:
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் - கொரானா சிலை ரவுண்டானா - அப்சரா இறக்கம் - ஆற்றோரம் ரோடு இடது புறம் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம். அல்லது பழைய பேருந்து நிலையத்திலிருந்து- அஸ்தம்பட்டி- அடிவாரம்- கன்னங்குறிச்சி செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை- அப்பா டிரேடர்ஸ் - பெட்ரோல் பங்க் - காந்திசிலை- புலிக்குத்தி ஜங்சன் - அப்சரா இறக்கம் - கொரானா சிலை ரவுண்டானா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முள்ளுவாடி கேட் வழியாக செல்லலாம்.
பால் மார்க்கெட் மார்க்கம்.
பால் மார்க்கெட் - அரசு மருத்துவமனை பழைய கேட் - நாட்டாமை கட்டிடம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்- திருவள்ளுவர் சிலை வழியாக பேருந்து - நிலையம் செல்லும் வாகனங்கள் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் தடைசெய்யப்பட்டுள்ளன.
மாற்றாக:
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கொரானா சிலை ரவுண்டானா அப்சரா - இறக்கம் ஆற்றோரம் ரோடு இடது புறம் திரும்பி பழைய பேருந்துநிலையம் செல்லலாம். அல்லது பழைய பேருந்து நிலையத்திலிருந்து பால் மார்க்கெட் வழியாக செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை - அப்பா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க் - காந்திசிலை - புலிக்குத்தி ஜங்சன் - அப்சரா இறக்கம் - கொரானா சிலைரவுண்டானா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வழியாக செல்லலாம்.
குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் செல்லலாம்.
பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள்: பழைய பேருந்து நிலையத்தின் முதல் தளம் - நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்தின் அடித்தளம் (Under Ground)- இருசக்கர வாகனங்கள், போஸ் மைதானம், பேலஸ் தியேட்டர் அருகில், சி.எஸ்.ஐ பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளை பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.