மேலும் அறிய

பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?

Parandur airport latest news : " பரந்தூர் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு தொகை, ஏக்கருக்கு 35 லட்சம் முதல் 2.75 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது"

சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.‌ விமான நிலையம் அமைப்பதற்கான, நிலம் கையகப்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிலத்திற்கான இழப்பீடுத் தொகையை, ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல் 2.75 கோடி ரூபாய் இவரை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் - Chennai International airport

சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சரக்கு விமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும் ? Parandur Airport Project Value?

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 

பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இழப்பீடு தொகை எவ்வளவு? 

இந்தநிலையில், கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஏக்கருக்கு 35 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை சமாளிக்கும் வகையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலம் கையகப்படுத்து தொடர்பான அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து, போராட்டக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பணிகள் தொடங்குவது எப்போது ?

அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக உடனடியாக இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் கட்டுமானத்திற்கான, முதற்கட்ட பணிகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
TVK Vijay: புயலாகுமா? புஸ்ஸாகுமா? தவெக சிறப்பு பொதுக்குழு - விஜய் கையிலெடுத்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்..  தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
Plane Crash: திடீரென கீழே விழுந்து சறுக்கி நொறுங்கிய விமானம்.. தீப்பிழம்பு, கரும்புகை, 3 பேர் பலி - வீடியோ வைரல்
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Embed widget