Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
அரியலூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரியலூர் மாவட்ட நீதிமன்றம். இங்கு காலியாக உள்ள கிளெர்க், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தலைமை சட்ட பாதுகாப்பு ஆலோசகர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - இளங்கலை சட்டப்படிப்பு மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம்
சம்பளம் - ரூபாய் 60 ஆயிரம் முதல் ரூபாய் 70 ஆயிரம்
துணை தலைமை சட்ட பாதுகாப்பு ஆலோசகர்:
காலிப்பணியிடம் - 3
தகுதி - இளங்கலை சட்டப்படிப்பு மற்றும் 7 ஆண்டுகள்
சம்பளம் - ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை
உதவி சட்ட பதுகாப்பு ஆலோசகர்:
காலிப்பணியிடங்கள் - 6
தகுதி - 3 ஆண்டுகள் அனுபவம் மற்றும் சட்டப்படிப்பு
சம்பளம் - ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 30 ஆயிரம் வரை
அலுவலக உதவியாளர்/ கிளெர்க்:
காலிப்பணியிடம் - 3
தகுதி - ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 12 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 15 ஆயிரம் வரை
வரவேற்பாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்
சம்பளம் - ரூபாய் 12 ஆயிரம் ரூபாய் 15 ஆயிரம்
பியூன்:
காலிப்பணியிடம் - 3
தகுதி - 8ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.
சம்பளம் - ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 12 ஆயிரம் வரை
விண்ணப்பிப்பது எப்படி?
மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே சென்று தக்க ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
இந்த பணியிடங்களுக்கு வரும் ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.





















