மேலும் அறிய

நீங்கள் இணைந்து பணியாற்றும் பொழுது இனிச்சது இப்ப கசக்குதா ? - இபிஎஸ் சரமாரி கேள்வி

நாங்கள் கூட்டணி வைத்தால் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏன் பதறுகிறார் ஏன் கோபப்படுகிறார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் இது எங்களுடைய கட்சி - இபிஎஸ்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட உறையூரில் அங்கு குடிநீரை பருகிய காரணத்தால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தேன். அமைச்சர் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை அதனால் இறப்பில்லை என்ற விபரங்களை தெரிவித்தார்.

குடிநீரில் கழிவு நீர் கலந்த காரணத்தினால் 15 நாட்களாக இந்த நீரை தான் பருகி வருகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதியில் இருக்கின்ற மாநகராட்சி அதிகாரிகள் இடத்தில் தெரிவித்திருக்கிறார்கள். கழிவு நீர் குடிநீரோடு கலந்து வருகிறது இதை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாத காரணத்தினால் இன்றைய தினம் 4 பேர் உயிர் நீத்திருக்கிறார்கள் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமைச்சர் மறைத்தது கண்டிக்கதக்கது

மாநகராட்சிக்கு அருகில் நடந்த திருவிழாவில் சித்திரை திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. உணவு மற்றும் ஓர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டதாகவும் அதை பருகியதால் அவர்கள் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள் என அமைச்சர் சொல்கிறார். அவர்களுக்கு உடலில் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தான் திருவிழாவுக்கு சென்றார்களா ? மற்ற பகுதியை சேர்ந்த மக்கள் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கவில்லை.

உறையூரில் நான்கு தெருவில் இருக்கின்ற மக்கள் கழிவுநீரோடு சேர்ந்த குடிநீரை பருகிய காலத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது எல்லாம் மறைத்தது கண்டிக்கத்தக்கது. அரசு மறைத்து தவறான செய்தியை வெளியிடுகிறது இது கண்டிக்கத்தக்கது. பல்லாவரம்  பகுதியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்கள். அந்த பகுதியை சேர்ந்த அமைச்சரும் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.

தங்களது ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை மறைப்பதை கொள்கையை வைத்திருக்கிறார்கள் இதை கண்டிக்கத்தக்கது. இந்த மக்கள் புகார் செய்து மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் குடிநீரில் கலப்பதை சரி செய்யாத காரணத்தால் இந்த நிலைமை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் சில கருத்துக்களை சொல்கிறார். நீட் தேர்வை பற்றி சொல்கிறார் நீட் தேர்வு பற்றி பலமுறை விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நீட் 2010 டிசம்பர் 21-ல் நோட்டிபிகேஷன் வெளியிட்டார்கள் அப்போது திமுக மத்தியில் கூட்டாட்சியில் இருந்தது
திமுக வின் காந்தி செல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது நீட்டை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ்.

அதை தடுப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் முடியவில்லை நீதிமன்றம் சென்று விட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் 2021-ல் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் இந்தியா கூட்டத்தில் அங்கம் வகித்தோம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று சொல்கிறார்.

2010ல் கொண்டு வரும் பொழுது ரத்து செய்திருக்கலாம் அல்லவா , அப்பொழுதும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இருந்தீர்கள் இதற்கு காரணம் திமுக தான்..

நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்

முதலமைச்சர் துடிக்க பேசுகிறார் நாங்கள் கூட்டணி வைத்தால் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏன் பதறுகிறார் ஏன் கோபப்படுகிறீர்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் இது எங்களுடைய கட்சி. நாங்கள் வெற்றி பெற வேண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்களும் பலம் வாய்ந்த அணியை 2026 சட்டமன்ற தேர்தலில் அமைப்போம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதலமைச்சர் பேசுவதை பார்த்தால் அவருக்கு பயம் வந்து விட்டது அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டு விட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

திமுக ஆட்சி எடுக்கப்பட்டு, அதிமுக ஆட்சி வரும் என்று அவர் மனதில் வந்த காரணத்தினால் அதன் வெளிப்பாடு பார்க்கப்படுகிறது. சட்ட மன்றத்தில் நான் நேருக்கு நேர் பார்த்தேன் அவர் பதற்றப்படுகிறார் அவர் பேச்சிலிருந்து வார்த்தைகளை பார்த்தேன்.

கருணாநிதி இந்த கருத்தை சொன்னார்

அதிமுகவை பொறுத்தவரை திமுகவை அகற்றப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். கருணாநிதி , பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது ஒரு கருத்தை சொல்லி வைக்கிறார் ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என்று சொல்லி இருக்கிறார்.

நீங்கள் இணைந்து பணியாற்றும் பொழுது இனிச்சது இப்ப கசக்குதா ?

முரசொலி மாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இலாக இல்லாத அமைச்சராக வைத்திருந்தார்கள். திமுகவிற்கு சாதகமாக இருந்தால் பாராட்ட அவர்கள் பாதகமாக இருந்தால் எங்கள் மீது பழி சுமத்துவார்கள். திமுகவிற்கு தான் அந்த டீலிங் எல்லாம் உண்டு.

திமுக அலுவலகத்தில் முதல் தளத்தில் ரெய்டு  நடந்து கொண்டிருந்தது கீழே கூட்டணி பேச்சு வார்த்தை அது அவர்களுடைய டீலிங் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget