Japan Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
இந்தியா படைத்த மிகப்பெரும் சாதனை ஒன்றை, ஜப்பானும் படைக்க முயற்சி செய்தது. ஆனால், அதில் தோல்வியை தழுவியுள்ளது. அது என்ன முயற்சி தெரியுமா.?

நிலவில் வண்கலத்தை தரையிறக்கி இந்தியா படைத்த சாதனையை, ஜப்பானும் படைக்க முயற்சி செய்தது. ஆனால், அதன் ரெசிலியன்ஸ் விண்கலம் நிலவில் தரையிறங்காமல் தோல்வியைத் தழுவியுள்ளது. அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
நிலவில் தரையிறங்கும் ஜப்பானின் முயற்சி
ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனமாக ஐஸ்பேஸ், நிலாவில் ஆய்வுகளை மேற்கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த நிறுவனம், கடந்த 2023-ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய, ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தோல்வியை தழுவிய ரெசிலியன்ஸ் விண்கலம்
அதைத் தொடர்ந்து, மீண்டும் ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த நிலையில், இன்று அதிகாலையில், ரெசிலியன்ஸ் விண்கலம், நிலவின் சுற்றுப்பாதையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நிலையில், அதனை நிலவின் மேற்பகுதியில் மென்மையாக தரையிறக்க, ஐஸ்பேஸ் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், கடைசி கட்டத்தில், திடீரென விண்கலம் அதன் தொடர்பை இழந்து, விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதனால், ஒருவேளை விண்கலம் நிலவில் மோதியிருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த நிகழ்வுகளை ஐஸ்பேஸ் நிறுவனம் நேரலை செய்து கொண்டிருந்த நிலையில், அதனை உடனடியாக நிறுத்தியது. இதனால், இந்த திட்டம் தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது.
இந்த ரெசிலியன்ஸ் விண்கலம், அறிவியல் பேலோடுகளை மட்டுமல்லாமல், இன்னும் சில நாடுகளின் ரோவர் மற்றும் கூட்டு கருவிகளையும் சுமந்து சென்றது. இந்நிலையில், இந்த மிஷன் தோல்வியடைந்தது, ஜப்பானின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு குறித்து ஐஸ்பேஸ் நிறுவனம் தரப்பிலிருந்து இன்னும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், விரையில் இது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்த இந்தியா
ஏற்கனவே, இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதியன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 மூலம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா பெருமை பெற்றது. அது தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி‘ என்று பிரதமர் மோடி பெயரிட்டார்.
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலம், 13 நாட்கள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டது. முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்த இந்தியாவை உலகமே பாராட்டியது. இந்த சாதனையின் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்குப் பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடாக இந்தியா மாறியது.
இந்த நிலையில், டெக்னாலஜியில் மிகுந்த முன்னேற்றமடைந்த நாடாக பார்க்கப்படும் ஜப்பானின், நிலவில் விண்கலத்தை இறக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது, அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.





















