தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
ஸ்ருதி நாராயணன் மீதுள்ள அவப்பெயர் மாற வேண்டும் என்றும், தப்பு பண்ணாத மனிதனே இல்லை என்றும் இயக்குனர் ரங்கராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள கட்ஸ் படத்தில் ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இயக்குனர் ரங்கராஜ் பேசியதாவது,
அவப்பெயர் மாறனும்:
ஸ்ருதி நாராயணன் சிங்கிள் ஷாட் ஒன்னு இருக்கு. படத்துல 12 நிமிஷம் இருக்குது. அவங்க பயங்கரமான ஒரு ஃபெர்ஃபாமர். இந்த சம்பவங்கள் நடந்தது எனக்கு தெரியாது. நான் தொடக்கத்தில் ஆடிஷன் வைக்கும்போது புடவை எடுத்துட்டு வந்து மீன்காரியா நடிச்சு காட்டுனாங்க. சிங்கிள் ஷாட்ல அவங்க பட்ட கஷ்டம் அதை லைவ்வா பாத்துருக்கேன் நான்.
அந்த வலி, இன்று அவங்களுக்கு இருக்குற அவப்பெயர் மாறனும். அவங்களும் பொண்ணுதானே. தப்பு பண்ணாத மனுஷனே கிடையாது. தவறு நடந்துடுச்சு. அந்த பொண்ணை வாழவிடுங்க. அவங்க திறமையான ஃபெர்பாமர். அதுனாலதான் அவங்க பெயரை நான் போட்டேன்.
ஆபாச காட்சிகள்:
படம் ஆரம்பிக்கும்போதே நான் நினைச்சேன். ஆபாச காட்சிகள் வரக்கூடாது. கீழ்த்தரமான வசனங்கள் வரக்கூடாது. இரட்டை அர்த்த வசனங்கள் வரக்கூடாது. ஒரு அம்மாவும், வயசுப் பையனும் ஒரு படத்தை போயி பாக்கனும், ஒரு அப்பாவும் வயசுப் பொண்ணும் போயி ஒரு படத்தை பாக்கனும்.
அவங்க ஒரு ஆபாசம் இல்லாம ரசிச்சு சிரிக்கனும். இப்போ இந்த படங்கள் அப்படி இருக்குதா? எல்லாரும் சொன்னாங்க கிளாமர் வை.. கிளாமர் வைனு சொன்னாங்க. கதை ஸ்ட்ராங்கா இருக்கும்போது நமக்கு எதுக்கு கிளாமர் தேவைப்படுது. தேவைப்பட்ற கிளாமர் வைக்கலாம். ரொம்ப ஆபாசமா, ரொம்ப இரட்டை அர்த்தமா பாக்கவே முடியல.
வாங்க மறுக்கிறார்கள்:
என் திரைப்படம் தரமான படம். பிடிக்குறதும், பிடிக்காததும் உங்களோட சாய்ஸ். சரியான முறையில் நான் தயாரிச்சுருக்கேன். போட்டிக்கு நீங்களும் வாங்க. நாங்களும் வர்றோம். 500 தியேட்டர் நீங்க வாங்குனா.. எனக்கு ஒரு 100 தியேட்டர் கொடுங்க. அப்போதானே யாரு ஜெயிக்குறாங்கனு தெரியும். ரொம்ப ரொம்ப போராடி வந்துருக்கேன்.
எங்க போனாலும் படத்தை வாங்க மாட்டேங்குறான். என் படத்தை பாக்காமலே நீ எப்படி குறை சொல்ல முடியும். என் படத்தை பாத்துட்டு நீங்க குறை சொல்லுங்க. வரும் வாரம் ரிலீஸ் ஆகுது. படம் வந்து ஜெயிச்ச பிறகு தனிநபர்ல எடுத்துட்டு போயிட்றீங்க. அவங்கதானே இந்த படத்தை பாக்குறாங்க. ஜெயிக்க வைக்குறாங்க. அந்த பணத்தை மக்களுக்கு ஏன் கொடுக்க மாட்டேங்குறீங்க?
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ள ஸ்ருதிநாராயணனின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை வெள்ளத்திரையிலும், சின்னத்திரையிலும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் தற்போது இதுதொடர்பாக பேசியுள்ளார்.





















