Pandian Stores 2: வாயை விட்ட சுகன்யா... அசந்த நேரத்தில் முத்துவேல் குடும்பத்துக்கு ஆப்பு வச்ச மீனா! 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' அப்டேட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 502ஆவது எபிசோடில் பழனிவேலுவை சுகன்யா அவமதித்த காட்சிகளும், முத்துவேல் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பற்றிய காட்சியும் ஒளிபரப்பாகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 502ஆவது எபிசோடில் குமாரவேல் மற்றும் அரசியின் ரகசிய திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து இப்போதுதான் குடும்பமே சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறது. என்றாலும் அரசியின் வீட்டில் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், இதற்கு முன்னதாக செந்தில் மற்றும் மீனா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதே போன்று கதிர் மற்றும் ராஜீ இருவரும் எதிர்பாராத திருப்பமாக திருமணம் செய்து கொண்டனர். இது இருவீட்டாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போன்று தான் இப்போது அரசியும் நடந்து கொண்டுள்ளார்.

பாண்டியன் மன வருத்தத்தில் இருப்பதால், அவருக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் கதிர் மற்றும் ராஜீ இருவரும் கடைக்கு சென்றனர். ஏதாவது வேலை செய்யவா மாமா என்று ராஜீ கேட்க, பாண்டியன் அதெல்லாம் ஒன்று வேண்டாம் என்று கூறிவிட்டார். இது ஒரு புறம் இருக்க முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் கட்டுக் கட்டுக்காக பணத்தை எடுத்து வைப்பதை பார்த்த சுகன்யா அப்படியே வந்து பழனிவேலுவிடம் வந்து சொல்ல, அதனை மீனா கேட்டுவிட்டார்.
மேலும், சுகன்யாவிடமிருந்து எல்லா விஷயங்களையும் போட்டு வாங்கினார். இதைத் தொடர்ந்து அரசு அதிகாரியான மீனா வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார். ஆனால், இது தொடர்பான காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக தங்கமயில் மீனாவிற்கு போன் போட்டு பேசியுள்ளார். அதோடு, தனது கணவர் சரவணனிடம் பேச ஆசைப்பட்டு மீனாவின் மூலமாக பேச முயற்சித்தும் பலனில்லை.
அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 502ஆவது எபிசோடு முடிவடைந்துள்ளது. இனி நாளைய எபிசோடில் அரசி மற்றும் குமாரவேல் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





















