கம்பம் அருகே அரசு பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து - தம்பதி உயிரிழந்த சோகம்
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியைச் சார்ந்தவர் நல்ல தம்பி (37), இவர் கம்பத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் முடிந்து இவருக்கு ரம்யா ( 30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இரவு கம்பத்தில் இருந்து ஆட்டோவில் நல்லதம்பி மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
சென்று விட்டு இன்று அதிகாலை நான்கு மணி அளவில் சொந்த ஊரான கம்பம் நோக்கி அவர்கள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே கம்பத்திலிருந்து வீரபாண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு சிறப்பு பேருந்து எதிர்பாராத விதமாக கம்பம் நோக்கி நல்லதம்பி ஓட்டி வந்த ஆட்டோவின் மீது பலமாக மோதி உள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் நல்லதம்பி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். படுகாயம் அடைந்த ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
மேலும் சம்பவ இடத்தில் உயிர் இழந்த ஆட்டோ ஓட்டுனர் நல்ல தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு வந்து பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்த உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய கணவன், மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.