ரிலீஸ் தேதி கன்ஃபாம் செய்த 'படை தலைவன்' படக்குழு.! 500 திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது!
“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் திரையரங்கில் வெளியிட உள்ளது.

VJ COMBINES நிறுவனம் தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படை தலைவன்'. காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம், காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களின் வாழ்வியலை விவரிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைக்க, எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அகமத் படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
புதுமையான கதைக்களத்தில், முழுக்க முழுக்க காட்டுக்குள் படமாக்கப்பட்ட இந்த படம் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. தமிழக காட்டு பகுதிகள் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் அதிக சிரத்தை எடுத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். அதே போல் சண்முக பாண்டியன் சுமார் இரண்டு வருடம் இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளார். அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படும் இந்த படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, திரையரங்குகள் இல்லாத காரணத்தாலும், சில பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார். மேலும் வரும் ஜூன் 13-ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. மதுரை வீரன் படத்திற்கு பிறகு சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















