மேலும் அறிய
அமித்ஷாவுடன் பா.ஜ.க., நிர்வாகிகள் உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு !
ஒன்றரை மணி நேரமாக நடைபெற்று வந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து, பாஜக மூத்த நிர்வாகிகள் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

அமித்ஷா மீனாட்சியம்மன் கோயிலில்
Source : whats app
ஒன்றரை மணி நேரமாக நடைபெற்று வந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்தது.
மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறக்கூடிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக மதுரைக்கு வருகை தந்தார். இந்நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கு விடுதியில் இருந்து இன்று காலை 11.45 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தடைந்தார். முன்னதாக கோயில் முன்பாக அமைந்திருந்த மதுரை ஆதீனம் மடத்தில் நின்றுகொண்டிருந்து மதுரை ஆதீனமான ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பின்ன் மதுரை ஆதீனத்தின் மூலமாக வெளியாகும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும், மனு ஒன்றையும் மதுரை ஆதீனம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சாமி தரிசனம் முடித்த பின் மீண்டும் தங்கும் விடுதிக்கு சென்றார்.
ஆதீனம் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம்..,” உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும். என கோரிக்கை அடங்கிய மனுவை உள்துறை அமைச்சரிடம் வழங்கினேன் என தெரிவித்தார்.
நிறைவடைந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம்
இந்நிலையில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்று வந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த நிர்வாகிகள் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். மதுரையில் சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வந்த. பாஜக உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது. தொடர்ந்து ஒவ்வொரு பாஜக மூத்த நிர்வாகிகளும் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















