தரை மட்டமான தக் லைஃப்....படத்தை காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் கமல் எடுத்த முடிவு
தக் லைஃப் படத்திற்கு முதல் நாள் தொடங்கி நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதால் படத்திற்கான எல்லா ப்ரோமோஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முதல் நாளே வாஷ் அவுட் ஆன தக் லைஃப்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படம் ஜூன 5 ஆம் தேதி வெளியானது. சிம்பு ,த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் என நட்சத்திரங்களை திரட்டி மணிரத்னம் சம்பவம் செய்திருப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மணிரத்னம் படமா என்று சொல்லும் அளவிற்கு படத்திற்கு முதல் நாள் தொடங்கியே நெகட்டிவ் விமர்சங்கள் வரத் தொடங்கின.
ப்ரோமோஷனை நிறுத்திய கமல்
இயக்குநர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. கமல் எழுதிய அமர் ஹே படத்தில் இருந்து தக் லைஃப் படத்திற்கான கதையை மணிரத்னம் எடுத்துள்ளார். மணிரத்னம் மீது பெரியளவில் மரியாதையும் நம்பிக்கையும் இருந்தபடியால் கமல் இந்த கதையில் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தக் லைஃப் படத்தின் அனைத்து ப்ரோமோஷன் வேலைகளையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுத்தியுள்ளது. தக் லைஃப் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பே கமல் படத்தை முழுவதுமாக பார்த்ததாகவும் படத்தில் அவருக்கு திருப்தி இல்லையென்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் முதல் நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியதும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை கமல் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தக் லைஃப் வசூல்
தக் லைஃப் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ 52 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் நாளில் தமிழ் நாட்டில் ரூ 13.35 கோடி வசூலித்த நிலையில் இரண்டாம் நாளில் ரூ 6.35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் தெலுங்கில் தக் லைஃப் படத்தின் வசூல் வெகுவாக சரிந்துள்ளது.
ரூ 300 கோடி பட்ஜெட்டில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















