கதை பிடித்திருந்தும் ரூ.234 கோடி வசூல் செய்த படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா! ஏன் தெரியுமா?
நடிகை ஜோதிகா கதை பிடித்திருந்தும் நடிக்க மறுத்த சூப்பர் ஹிட் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஒவ்வொரு கதையையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.தென்னிந்திய மொழி படங்கள் அவருக்கு போர் அடித்துவிட்ட நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இதற்காக மும்பையில் தற்போது குடியேறியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற 'துடரும்' படத்தில் ஜோதிகா நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஆனால், அந்தப் படம் தான் இப்போது உலக அளவில் ரூ.234 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி இருந்த இந்த படத்தில், மோகன் லால் கமிட் ஆனதும் ஜோதிகாவை சந்தித்து கதை கூறியுள்ளார். இந்த கதையை ஜோதிகா தன்னுடைய கணவர் சூர்யாவுடன் இணைந்து கேட்ட நிலையில், கதை இருவருக்குமே பிடித்து விட்டதால், எப்போது படம் துவங்க போகிறது என கேட்டுள்ளனர். இயக்குனர் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட அதே நேரத்தில், ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் தங்களுடைய பிள்ளைகளுடன் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டு பிளைட் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தயார் செய்து விட்டார்களாம். அதே போல் கால்ஷீட் பிரச்சனை இல்லாத வண்ணம் இந்த டூரை அவர்கள் பிளான் பண்ணி இருந்தனர்.
'துடரும்' படத்தில் நடித்தால் கண்டிப்பாக உலக சுற்றுலாவில் செல்ல முடியாமல் போகும் என்கிற நிலை இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாது என ஜோதிகா கூறியுள்ளார். இதை தொடர்ந்தே ஷோபனாவை நடிக்க வைத்தார் இயக்குனர் தருண் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.




















