Krishna Wife Photo: நடிகர் கிருஷ்ணாவின் 2-ஆவது மனைவி யார் தெரியுமா? ஹீரோயின் போல இருக்காங்களே - வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கிருஷ்ணா திடீர் என தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில், அந்த பெண்ணின் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் கே கே சேகரின் இரண்டாவது மகன் தான் கிருஷ்ணா. எனவே சிறு வயதிலேயே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து. இதை தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய கிருஷ்ணா, அமெரிக்காவில் MBA படிப்பை முடித்து சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் பணியாற்றி வந்தாலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வம் காரணமாக பல படங்களில் சிறு சிறு வேடத்தில் நடிக்க துவங்கினார்.
இதன் பின்னர், அலிபாபா படத்தில் ஹீரோவாக அறிமுகமான கிருஷ்ணாவுக்கு இந்த படம் சிறந்த ஓப்பனிங்காக அமைந்த நிலையில், இதை தொடர்ந்து வெளியான கழுகு படமும் ஹிட் அடித்தது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிருஷ்ணா. ஆனால் சரியான கதையை தேர்வு செய்யாத காரணத்தால், கிருஷ்ணா இப்போது சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் வெப் சீரீஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிருஷ்ணா கடந்த 2014-ஆம் ஆண்டு, ஹேமலதா என்கிற தன்னுடைய காதலியை பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்து நிலையில், 16 மாதத்திலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் படியை ஏறினர். மனைவி எதிர்பார்க்க கூடிய ஆடம்பர வாழ்க்கையை தன்னால் கொடுக்க முடியவில்லை என்பதால், தன்னை ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு அடித்து அவர் கொடுமை படுத்தியதாகவும்... அவரை சந்தேகத்தால் தன்னுடைய திரையுலக கேரியர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், கிருஷ்ணா தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அதே போல் இவரின் சதோகரர் தமிழில் பில்லா, ஆரம்பம், அறிந்தும் அறியாமலும் போன்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவரதன் ஆவார். ஆனால் இவர் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் நடித்த யட்சன் திரைப்படம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா விவாகரத்துக்கு பின்னர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட தகவலை சமீபத்தில் அறிவித்தார். கோவிலில் எளிமையான முறையில் இவரது திருமணம் நடந்த நிலையில்... யாரை திருமணம் செய்து கொண்டார் என்பது பற்றி அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் கிருஷ்ணா திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிருஷ்ணா தன்னுடைய நீண்ட நாள் தோழியான, சாவித்யா சுதர்சன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளாராம். இவரது 2-ஆவது மனைவியின் புகைப்படம் இப்போது வெளியாகி உள்ளது. அவர் பார்க்க ஹீரோயின் போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.





















