மேலும் அறிய
தமிழ்நாடுதான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரமா..? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன?
மாணவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளவும், மன அழுத்தங்களை சமாளிக்கவும் உதவும் திறன்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும் - மனநல ஆலோசகர்

மனநலம் சார்ந்த தீர்வுக்கு என்ன வழி
Source : whats app
நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு: முக்கியக் காரணங்கள் 2022ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் மொத்தம் 19,834 தற்கொலைகள் நடந்ததாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாடு முழுவதும் ஏற்பட்ட மொத்த தற்கொலைகளின் 11.6% ஆகும். இந்த எண்ணிக்கை மட்டும் மாநிலத்தில் மனநலப் பிரச்னைகள் தீவிரமாக உள்ளதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை ஏன் அதிகரித்துள்ளது? தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதில் பல்வேறு காரணிகள் அடங்கியுள்ளன. இது நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது. மனநல பிரச்னைகள், பொருளாதார சிக்கல்கள், சமூக அழுத்தங்கள், குடும்ப பிரச்னைகள், வேலைவாய்ப்பு குறைபாடுகள், கல்வி தொடர்பான மன அழுத்தம், நோய்களின் காரணமாக ஏற்படும் மனநல சிக்கல்கள், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிர தாக்கம்மற்றும் அன்பும் ஆதரவும் இல்லாத தனிமை ஆகியவை முக்கிய காரணிகளாகும். “இந்நிலையில் நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவு ஆய்வாளர்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசுத் தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்கொலை எண்ணம் ஏன்?
இந்நிலையில் இது குறித்து மனநல ஆலோசகர் ப.ராஜசௌந்தரபாண்டியனிடம் பேசினோம் அவர் நம்மிடம்...,” தற்கொலை தடுப்பிற்கு முக்கியமான அறிகுறிகள் தற்கொலை செய்ய எண்ணும் ஒருவரின் மனநிலையை புரிந்து கொள்ள, அவர்கள் காட்டும் சில முக்கிய அறிகுறிகளை கவனிக்க வேண்டும். சமுதாயத்தில் இருந்து தனிமையாக இருத்தல், மரணம் அல்லது தற்கொலை பற்றி அடிக்கடி பேசுதல் போன்றவை ஆரம்பசட்ட சிக்னல்களாக இருக்கலாம். கூடுதலாக, மாத்திரைகள் அல்லது ஆபத்தான பொருட்களை தேவையில்லாமல் வாங்குவது, தூக்கத்தில் அல்லது சாப்பாட்டில் பிரச்னைகள், மற்றும் போதைப்பொருள் பழக்கம் போன்றவையும் இதனை பிரதிபலிக்கின்றன. அதிகமாக பதற்றத்துடன் காணப்படுதல், எளிதில் எரிச்சலடைவது, மௌனமாக இருப்பது, குற்ற உணர்ச்சி, நம்பிக்கை இழந்து பேசுவது, மற்றும் மனநல பாதிப்புகள் இதை மேலும் வலுப்படுத்தக்கூடும். மிக முக்கியமாக, அவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இது அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டும். இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடனடி உதவியைச் செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். கல்வி மற்றும் வேலை சார்ந்த அழுத்தங்கள்மாணவர்களில் கல்வி தொடர்பான மன அழுத்தம் மிகுந்ததாக காணப்படுகிறது. பெற்றோர் மற்றும் சமூகம் சார்பாக அதிக எதிர்பார்ப்புகள், தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் மாணவர்களை தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாக்குகிறது. இளம் தொழிலாளர்கள் தங்களின் வேலை நிலைத்தன்மை குறைந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
தீர்வுகளுக்கான வழிமுறைகள் மனநலத்தின் முக்கியத்துவம்
போதைப்பொருள் பழக்கம் மற்றும் அதன் தாக்கம் தமிழ்நாட்டில் மதுவும், போதைப்பொருள்களும் தற்கொலை எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. போதைப்பொருள் பழக்கம் மனநலத்தை பெரிதும் பாதித்து, ஒருவரின் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களை குறைக்கிறது. இதில் இருந்து தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன.
குடும்ப மற்றும் சமூக அழுத்தங்கள் குடும்ப வன்முறைகள், திருமண பிரச்னைகள் மற்றும் காதல் தோல்விகள் உள்ளவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மன அழுத்தத்தை பகிர்ந்து கொள்ளப் பலருக்கு ஆதரவான நட்புக்கூட்டங்கள் அல்லது குடும்ப உறவுகள் இல்லை. தீர்வுகளுக்கான வழிமுறைகள் மனநலத்தின் முக்கியத்துவம்: மனநலம் என்பது மனிதனின் வாழ்வின் அடிப்படை மையமாக உள்ளது. மனநலத்தைப் பற்றிய திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்களை சமூக அளவிலும் குடும்ப அளவிலும் வளர்த்தெடுக்க வேண்டும். மனநலப் பிரச்னைகள் அல்லது மன அழுத்தம் அனுபவிக்கக்கூடியவர்கள் உதவி கோருவது ஒரு பலவீனம் அல்ல, அது மனவலிமையின் அடையாளம் என்பதை வலியுறுத்த வேண்டும்.
ஆதரவு அமைப்புகள்: மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்குவது அவசியமாகும். மனநல ஆலோசனை மையங்கள் மற்றும் சமூக ஆதரவு அமைப்புகள் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாய உறுப்பினர்கள் மாணவர்களின் பிரச்னைகளை கவனமாகக் கேட்டு அவர்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும்.
விழிப்புணர்வு முகாம்கள்: தற்கொலை தடுப்பு மற்றும் மனநலத்தின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தேர்வுகளில் தோல்வி அல்லது மற்ற மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை குறித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்: மது மற்றும் போதைப்பொருள் பாவனை மாணவர்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய மிகப்பெரிய காரணியாக உள்ளது. இதனை தடுக்க அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருளின் தீமைகளை விளக்கவும், அதன் பாவனையை தடுக்கவும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சமாளிக்கும் திறன்களின் முக்கியத்துவம்: மாணவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளவும், மன அழுத்தங்களை சமாளிக்கவும் உதவும் திறன்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும். இது அவர்களுக்கு மீள்தன்மையை வழங்கும் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வாழ்வின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள உதவும். தற்கொலை ஒரு முடிவு அல்ல, தற்கொலை என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு தற்காலிக நெருக்கடியை சமாளிக்க முடியாமல், நிரந்தர தீர்வாக கருதப்படும் ஒரு முடிவு மட்டுமே. ஆனால் உண்மையில், தற்காலிக சவால்களை சமாளிக்க உதவும் பல வழிகள் உள்ளன. மனநல நிபுணர்களின் உதவி, குடும்ப மற்றும் நண்பர்களின் ஆதரவு, மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளின் மூலம், இந்த நெருக்கடிகளை கடந்து செல்ல முடியும். எந்த நெருக்கடியையும் நிரந்தரமாக கருதாமல், அதனை சமாளிக்க உதவும் ஆதரவுகளை நாடுவது முக்கியம். ஆதரவும், உரிய வழிகாட்டுதலும் அனைத்தையும் மாற்ற முடியும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement