Coconut Price Hike : தேங்காய் விலை உச்சம்! திருவாரூர், ஈரோட்டில் கிடுகிடு விலை உயர்வு!
திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து, கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடு, கிடுவென உயர்ந்த தேங்காய் விலை
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் தென்னை மரங்கள் முற்றிலும் சாய்ந்து தேங்காய் உற்பத்தி என்பது பெரும் வீழ்ச்சியடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை மற்றும் வெளியூர்களில் இருந்து தேங்காய் வரத்து மூலம் திருவாரூர் மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
பொதுவாக உற்பத்தி அதிரிக்கும் போது விலை குறைவதும், உற்பத்தி குறைக்கின்ற போது விலை ஏற்றம் அடைவது வழக்கம். இளநீர் தேவை என்பது அதிகரிப்பது மற்றும் கொப்பரை கொள்முதலில் உரிய விலை கிடைப்பது போன்ற காரணங்களால் தேங்காய் விலை என்பது கடுமையாக உயர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் என்பது கிடு, கிடுவென உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து, கிலோ ரூ.80- என உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் விலை ஏற்றத்தினால் இல்லதரசிகள் கவலை அடைந்துள்ளனர். தேங்காய் விலை ஏற்றத்தினால், அன்றாட உணவில் இடம் பிடிக்காத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேங்காய் வியாபாரி ஒருவர் கூறுகையில், தேங்காய் மிக அத்தியாவசிய பொருளாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு உரிய அளவில் உற்பத்தி இல்லாததாலும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நல்ல விலை கிடைப்பதால், விலை ஏற்றம் அடைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை தவிர்க்க தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது விலை குறையும், இந்த விலை ஏற்றம் என்பது மக்களுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு பாதிப்பு தான் என்றார்.
மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு
ஈரோடு மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைந்ததை நிலையில் கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு காங்கயம், கோபி, அத்தாணி, அந்தியூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து தினமும் 5 வாகனங்களில் இருந்து 30க்கும் டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தேங்காய் பயன்பாடு அதிகரித்திருப்பதாலும், அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாலும், தேங்காயின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தேங்காய் ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.60க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மார்க்கெட்டில் ரூ.20 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை வணிக கடைகளில் ஒரு கிலோ சின்ன தேங்காய் ரூ.60க்கும், பெரிய தேங்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது, ‘பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும், விளைச்சல் குறைந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவை தவிர, கடந்த மே மாதத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது லிட்டர் ரூ.396க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஈரோடு மார்க்கெட்டிற்கு தினசரி 30 டன் தேங்காய் வரத்தான நிலையில் தற்போது 20 டன்னாக குறைந்துள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.’’ இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.




















