பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 63ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி துவக்கம்
முதல் மூன்று போட்டிகளில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, தேனி எல்.எல்.எஸ் மில் கூடைப்பந்து கழக அணி, திருநெல்வேலி கூடைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது.
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அமரர் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 63 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதல் மூன்று போட்டிகளில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, தேனி எல்.எல்.எஸ் மில் கூடைப்பந்து கழக அணி, திருநெல்வேலி கூடைப்பந்து கழக அணி வெற்றி பெற்றது.
கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப் பிடி.சிதம்பர சூர்ய நாராயணன் நினைவு சுழற் கோப்பைகாண 63வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளம் தென்கரையில் உள்ள நினைவரங்கத்தில் இன்று தொடங்கி வருகின்ற 21ம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டியில் இந்திய கப்பற்படை அணி, கேரள மாநில மின்வாரிய அணி, விளையாட்டு விடுதி சென்னை அணி, டெல்லி மாநில கூடைப்பந்து அணி, கஸ்டம்ஸ் அணி, இந்தியன் வங்கி அணி சென்னை, விமானப்படை புது டெல்லி அணி, என்பது உள்ளிட்ட 21 அணிகள் பங்கேற்கின்றன.
Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
வெற்றிபெறும் அணியினருக்கான பரிசு தொகை
இப்போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில் பகல் மற்றும் இரவு மின் ஒளி போட்டிகளாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50000 மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாவது பரிசாக ரூபாய் 40 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாவது பரிசாக 30000 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும் நான்காவது பரிசாக ரூபாய் 20000, போட்டி முடிவில் சிறந்த ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
மோதிக்கொள்ளும் அணியினர்
இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், வத்தலகுண்டு ராயல் கூடைப்பந்து அணியும், மோதியதில் 80 க்கு 78 என்ற பெரியகுளம் புள்ளி கணக்கில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் திருநெல்வேலி PAKK கூடைப்பந்து அணியும், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் கிரீன்ஸ் அணியும் மோதியதில், 96 க்கு 33 என்ற புள்ளி அடிப்படையில் திருநெல்வேலி PAKK கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தேனி எல் எஸ் மில் கூடைப்பந்து கழக அணியும், வேலூர் கூடைப்பந்து கழக அணியும் மோதியதில், 92க்கு 74 என்ற புள்ளி அடிப்படையில் தேனி எல் எஸ் மில் கூறைப்பந்து களக அணி வெற்றி பெற்றனர். இந்த கூடைப்பந்து போட்டியை காண்பதற்காக பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டியை கண்டு களித்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சில்வர் ஜூப்ளிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்