மேலும் அறிய

3 மாதத்தில் இடிந்த கட்டிடம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி.. சிக்கிய மாணவர்கள்

மதுராந்தகம் அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு மூன்று மாதத்தில், மேற்கூரை இடிந்து விழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பள்ளிக் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுமான தரம் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.

வகுப்பறையில் மாணவர்கள் இருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்களும் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறக்கப்பட்ட மூன்று மாதத்தில் அதிர்ச்சி

இந்த விபத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தப் பள்ளிக் கட்டிடம் கடந்த ஏப்ரல் 4, 2025 அன்றுதான் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதாவது, கட்டிடம் திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது கட்டுமானப் பணியின் தரம் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை 

மதுராந்தகம் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறக்கப்பட்ட மூன்று மாதங்களிலே இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக மாணவர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிக் கட்டிடங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விபத்து, இனி வரும் காலங்களில் பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!

Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!

TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை

India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?

ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை

Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!

Watch Video: கண்காட்சியில் கழண்டு விழுந்த ராட்சத ராட்டினம்.. பதற வைக்கு வீடியோ!

Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!

Embed widget