மேலும் அறிய

Watch Video: ‘வெறும் செல்போன் பர்சேஷ்தான்.. ஆனால்’ - மேளதாளத்துடன் ஊர்வலம் வந்து அதகளப்படுத்திய டீக்கடைக்காரர்!

மத்திய பிரதேசத்தில் டீக்கடைகாரர் ஒருவர் தனது 5 வயது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக ஆன்ராய்டு செல்போன் வாங்கியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் டீக்கடைகாரர் ஒருவர் தனது 5 வயது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக ஆன்ராய்டு செல்போன் வாங்கியுள்ளார். இதனால் அவர் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் ஊர்வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் வியக்க வைத்தது. 

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா. இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவரின் ஆன்லைன் வகுப்பிற்காக நீண்டநாட்களாக செல்போன் வாங்க வேண்டும் ஆசை இருந்துள்ளது. முராரியின் குடும்பத்தில் இதுவரை செல்போல் வாங்கியதில்லை எனவும் கூறப்படுகிறது. 

மது குடிக்கும் பழக்கத்தில் இருந்த முராரி சில  மாதங்களுக்கு முன் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதுவும் தனது மகளின் கோரிக்கைப்படியே. அதுமட்டுமில்லாமல் மதுகுடிக்க செலவு செய்யும் பணத்தை சேமித்து வைத்து மொபைல் வாங்கி தருமாறு அந்த 5 வயது சிறுமி கேட்டுள்ளார். மகளின் விருப்பப்படியே ரூ. 12, 500 க்கு ஆண்ட்ராய்டு மொபைல் போனையும் வாங்கியுள்ளார். முராரி குஷ்வாஹாவிடம் நிதி பற்றாக்குறை இருந்ததால் அவர் செல்போனை ஃபினான்ஸில் வாங்கியுள்ளார். 

 

இதைத்தொடர்ந்துதான் அவர் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் ஊர்வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நண்பர்களுக்கு விருந்தும் அளித்துள்ளார். 

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமியும் அவளது உடன்பிறப்புகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ஒலிபெருக்கியில் பாடல் இசைக்க, மக்கள் ஊர்வலத்தில் நடமாடுகின்றனர். 

இதுகுறித்து முராரி குஷ்வாஹா கூறுகையில், “மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டு பணத்தை சேமித்து வைக்குமாறு எனது 5 வயது மகள் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அந்த பணத்தில் அவளுக்கு ஒரு செல்போன் வாங்கி தருமாறு நீண்டநாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். நானும் எனது மகளுக்கு ஒரு தனித்துவமான பாணியில் மொபைல் போனை வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதன்படி இப்போது செல்போன் வாங்கியுள்ளேன். எனது மகளின் சந்தோஷத்திற்காகவே இவை அனைத்தையும் செய்தேன்” எனத் தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget