Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
மஹிந்திரா, டாடா உள்ள முன்னணி நிறுவனங்களின் ரூபாய் 20 லட்சத்திற்கும் கீழே விற்பனைக்கு உள்ள தரமான எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது. சொகுசாகவும், பல்வேறு அதிநவீன வசதிகளுடன் நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டில் பல எஸ்யூவி கார்களை மஹிந்திரா, டாடா, கியா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர்.
ரூபாய் 20 லட்சம் பட்ஜெட்டின் உள்ளே விற்பனைக்கு வந்துள்ள அற்புதமான எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. Hyundai Creta:
ஹுண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி படைப்பு இந்த கிரெட்டா. இந்த கிரெட்டா கார் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 13.79 லட்சம் ஆகும். 1497 சிசி எஞ்ஜின் பெட்ரோல் திறனிலும், 1493 எஞ்ஜின் சிசி திறன் டீசலிலும் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைககப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ரூபாய் 13.79 லட்சத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. அதிகபட்சமாக ரூபாய் 25.69 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
2. Mahindra XUV 3XO

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திராவின் பட்ஜெட் ரக எஸ்யூவி கார்தான் இந்த XUV 3XO ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 9.66 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 19.66 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த மாடலில் மொத்தம் 29 வேரியண்ட்களை மஹிந்திரா உருவாக்கியுள்ளது. பெட்ரோலில் 1197 எஞ்ஜின் சிசி திறனும், டீசலில் 1487 சிசி எஞ்ஜின் சிசி திறனும் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. Toyota Urban Cruiser Hyryder:
டொயோட்டோ நிறுவனத்தின் எஸ்யூவி கார்தான் அர்பன் க்ரூசர் ஹைரைடர். இந்த கார் மொத்தம் 18 வேரியண்ட்களில் உள்ளது. இதன் தொடக்கவிலை ரூபாய் 14.56 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 26.03 லட்சம் வரை விற்கப்படுகிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல், எலக்ட்ரிக்கில் ஓடும் ஹைப்ரிட் மாடலில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் கார் மட்டும் 1490 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. மற்ற கார்கள் அனைத்தும் 1462 சிசி திறன் கொண்டது.
4. Mahindra XUV700:

எஸ்யூவி கார் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு படைப்புதான் மஹிந்திரா XUV700. 5 முதல் 7 சீட்டு வரை கொண்ட மாடல்களில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 66 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 18.30 லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 1997 சிசி எஞ்ஜின் திறன் பெட்ரோல் காரிலும், 2184 சிசி எஞ்ஜின் டீசல் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 32.78 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. விலைக்கு ஏற்ப வசதிகள் மாறுகிறது.
5. Maruti Brezza:
மாருதி நிறுவனத்தின் 5 பயணிகள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கார்தான் இந்த மாருதி ப்ரீசா. இதன் ஆரம்ப விலை ரூபாய் 10.25 லட்சம் ஆகும். மொத்தம் 15 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்து. அதிகபட்சமாக ரூபாய் 17.35 லட்சம் வரை விற்கப்படுகிறது. 1462 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார்.
6. Tata Punch:
டாடா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களில் மிகவும் வெற்றிகரமான காராக இந்த டாடா பஞ்ச் கார் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் வகையில் இந்த கார் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 7.41 லட்சம் மட்டுமே ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 12.80 லட்சம் வரை விற்கப்படுகிறது. மொத்தம் 35 வேரியண்டகளில் இந்த கார் சந்தையில் விற்கப்படுகிறது. 1199 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார் ஆகும்.

7.Tata Nexon:
டாடா நிறுவனத்தின் மற்றொரு எஸ்யூவி கார் இந்த டாடா நெக்சான். இந்த காரும் பாதுகாப்பு அம்சத்தில் டாடா பஞ்ச் போன்று 5 ஸ்டார் தரத்தைப் பெற்றுள்ளது. நவீன வசதிகளுடன் சந்தையில் விற்கப்படும் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.50 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 19.24 லட்சம் வரை விற்கப்படுகிறது. மொத்தம் 49 வேரியண்ட்களில் இந்த கார் விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் வகையில் இந்த கார் இயக்கப்படுகிறது. 1199 சிசி மற்றும் 1497 சிச எஞ்ஜின்கள் முறையே பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது.





















