அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
Lokesh Kanagaraj : கூலி படத்தின் ப்ரோமோஷனில் அஜித் குமார் படத்தை இயக்குவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்

ஆகஸ்ட் 14 வெளியாகும் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் , ரஜினி, விஜய் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக அஜித் படத்தை இயக்குவாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது லோகேஷ் பதிலளித்துள்ளார். கூலி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய லோகேஷ் " அஜித் சார் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரது ஸ்டைலில் எனக்கு பிடித்த மாதிரி ஒரு ஆக்ஷன் திரைப்படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எனக்கு எல்லா நடிகர்களுடனும் படம் பண்ண வேண்டும். மாநகரம் படத்தில் இருந்தே சுரேஷ் சந்திரா சாரை எனக்கு தெரியும். ஒரு கதையின் பேசுவார்த்தையும் அவ்வப்போது நடந்து வருகிறது. எங்கள் இருவருக்குமான நேரம் ஒத்துழைத்தால் நிச்சயமாக தொடங்கிவிடலாம். ஆனான் என்னுடைய இயக்கத்தில் அஜித் சாரின் படம் 100 சதவீதம் வரும்" என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
"I know Suresh Chandra sir from my 1st film. Talks started about a collab 10 months back. A film with #Ajith sir will 💯 happen. But not sure when"
— Trollywood 𝕏 (@TrollywoodX) July 26, 2025
- Loki #AjithKumar pic.twitter.com/4yENuIfgGl





















