மேலும் அறிய

கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என போராடிய ஓபிஎஸ்-க்கு ரெட் சிக்னல் வந்துவிட்டதாக சொல்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக தமிழ்நாடு வரும் மோடி இபிஎஸ்-ஐ சந்தித்து முக்கிய விஷயங்களை பேசவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடியை எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக தமிழ்நாடு வருவதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 

இன்று பிரதமர் மோடியும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ம் நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டணி குறித்தும் முக்கிய விஷயங்களை ஆலோசிக்கவிருப்பதாக சொல்கின்றனர். தமிழக பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாகவும், சுற்றுப்பயண பிரச்சாரத்தில் இது இபிஎஸ்-க்கு ப்ளஸாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மற்றொரு பக்கம் பிரதமரை சந்திப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவும், பதவியும் கைகளை விட்டு நழுவிய பிறகு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஓபிஎஸ். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ரூட்டை மாற்றியது பாஜக. அதிமுக பாஜக கூட்டணியால் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். என்ன ஆனாலும் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள்ளோ கூட்டணிக்குள்ளோ சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் இபிஎஸ்.

அதனால் பிரதமரையே நேரடியாக சந்தித்து கூட்டணி பற்றி பேசிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஓபிஎஸ். இந்த சந்திப்பு நடந்தால் கூட்டணியிலும் தனது இடம் உறுதியாகிவிடும், அதேபோல் தனக்கான செல்வாக்கையும் நிரூபித்துவிடலாம் என கணக்கு போட்டுள்ளார் ஓபிஎஸ்.

ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் நபர்களின் லிஸ்ட்டில் ஓபிஎஸ் பெயர் இல்லை என சொல்கின்றனர். இபிஎஸ், ஓபிஎஸ் 2 பேருமே மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்ட நிலையில், இபிஎஸ்-க்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர். பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திற்கு பிறகே ஓபிஎஸ் தனிக்கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரை மீனாட்சி அம்மன் உண்டியல்: கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை!
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட்டுக்கு செக் !
மதுரையில் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்... டோல்கேட் தலைக்கு வந்த செக் !
"முதல்வர் விஜய் அண்ணன் அனுப்பிய சின்ன அண்ணன் நான்" - அமைச்சர் காந்திராஜ் நெகிழ்ச்சி
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Embed widget