மேலும் அறிய

Invalid Marriages: சட்டப்படி செல்லாத திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்தில் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்களில் அவர்கள் உரிமை கோரலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி செல்லாத திருமணம் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்களுக்கு அவர்கள் உரிமை கோரலாம் என கூறியுள்ளது.

சட்டப்படி செல்லாத திருமணங்கள்:

கடந்த 2010ஆம் ஆண்டு, வழக்கு ஒன்றில், இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் சொத்துக்களைப் பெறுவதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மூதாதையர் சொத்தை பெறுவதற்கு இத்தகைய குழந்தைகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கில், சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்திலும் சரி, பெற்றோர் சொத்திலும் சரி, உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் வேறு விதமான தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு:

இந்த விவகாரம் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கு எடுத்தது. 

இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், "சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்கள், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வழியாக பிறக்கும் குழந்தைகள், பெற்றோரின் மூதாதையர் சொத்தில் உரிமை கோரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் (HMA) பிரிவு 16(1) மற்றும் பிரிவு 16(2) இன் கீழ் வரும் குழந்தை, இந்து வாரிசுச் சட்டத்தின் (HSA) கீழ் சட்டப்பூர்வ குழந்தையாக கருதப்படும் என உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம் சொல்வது என்ன?

இந்து திருமண சட்டப்பிரிவு 16(1) மற்றும் (2) இன் கீழ் வரும் குழந்தைக்கு அவர்களின் பெற்றோரின் சொத்தில் உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காக  இந்து வாரிசு சட்டத்திற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், 1955, பிரிவு 16(3)இன் கீழ், செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பிரிவு 16(3)இன்படி, அத்தகைய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சொத்தை மட்டுமே உரிமை கோர முடியும். மூதாதையர் சொத்தில் உரிமை கோர முடியாது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம், வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:
Breaking News LIVE: "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPSKanchanjunga Express | FULL SPEED-ல் வந்த சரக்கு ரயில், தூக்கி வீசப்பட்ட ரயில் பேட்டி!ஐந்து பேர் பலி!Chandrababu and Nitish kumar | சந்திரபாபு நாயுடு vs நிதிஷ் குமார்..சபாநாயகர் CHAIR-க்கு போட்டி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:
Breaking News LIVE: "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Viral Video : மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!
மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்!
Watch Video: அடேங்கப்பா.. பாடிபில்டிங் ஸ்டைலில் கலக்கல்..பீச் வாலிபாலில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Watch Video: அடேங்கப்பா.. பாடிபில்டிங் ஸ்டைலில் கலக்கல்..பீச் வாலிபாலில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு!
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு!
Pakistan: ”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
Embed widget