மேலும் அறிய
Indian Army Day 2025: மக்களே! இந்திய ராணுவம் பற்றி கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்
Army Day: இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இ்ந்த நாளில் இந்திய ராணுவம் பற்றி அறியாத பல தகவல்களை கீழே காணலாம்.
இந்திய ராணுவத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் கமாண்டர் இன் சீப் ஆக பதவியேற்ற நாள் ஆகும். இந்த நாளை போற்றும் விதமாகவே ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய ராணுவத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. முதலாம் உலகப்போரில் 1.3 மில்லியன் இந்திய ராணுவ வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்திற்காக சண்டையிட்டனர். இந்த போரில் 74 ஆயிரம் இந்தியர்கள் வீர மரணம் அடைந்தனர். டெல்லியில் உள்ள இந்தியா கேட் அவர்களின் வீரமரணத்தைப் போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
2. இந்திய ராணுவத்தில் 1.2 மில்லியன் ஆக்டிவ் ட்ரூப் மற்றும் 0.9 மில்லியன் ரிசர்வ் ட்ரூப் உள்ளனர்.
3. உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இடம் உள்ளது.
4.61வது குதிரைப்படை படைப்பிரிவு இந்திய ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய குதிரைப்படைப் பிரிவு ஆகும்.
5. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகவும் பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கிறது.
6. ஐ.நா. அமைதிப்படையில் அதிகளவு இந்திய வீரர்கள் உள்ளனர்.
7. உலகிலேயே உயரமான பாலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள பெய்லி பாலத்தை 1982ம் ஆண்டு இந்திய ராணுவம் கட்டியது.
8. இந்திய ராணுவம் நாட்டின் பல பேரிடர்களில் நேரடியாக களமிறங்கிய துரிதமான மீட்பு படையில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு நடந்த வயநாடு பேரிடர் துயரச்சம்பவத்திலும் இந்திய ராணுவம் திறம்பட செயல்பட்டது.
இதுபோல இந்திய ராணுவம் உலகின் மற்ற ராணுவங்களை காட்டிலும் பல விதங்களில் தனித்துவமாக திகழ்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion