TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
ஜூன் 5ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி 2,95,134 தேர்வர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,39,871 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 6) கடைசித் தேதி ஆகும். நேற்று மாலை வரை 2.95 லட்சம் மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
2 லட்சம் பொறியியல் இடங்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி தொடங்கியது. 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே, இந்த முன்பதிவு தொடங்கியது.
விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2,413 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 லட்சம் பேர் விண்ணப்பமா?
ஜூன் 5ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி 2,95,134 தேர்வர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,39,871 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். இதில் 2,14,005 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://www.tneaonline.org/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள இ மெயில் முகவரி, பிறந்த தேதி, பிளஸ் 1 தேர்ச்சி, தகுதித் தேர்வு ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி என்னும் சூழலில், மாணவர்கள் ஜூன் 9ம் தேதிவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜூன் 27ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்
ஜூன் 20 வரை அவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்படும். 27ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னர் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பொறியியல் சேர்க்கைக்கான செயலர் தெரிவித்து உள்ளார்.
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.






















