Gold Loan: குஷியான செய்தி.. இனி நகையை அடகு வைத்தால் கூடுதல் கடன்.. ஆர்பிஐ போட்ட ஆர்டர் இதான்
Gold Loan LTV Ratio Hike: வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பு வரை வைக்கப்படும் தங்க நகைகளுக்கு 85 சதவீதம் வரை கடன் வழங்க ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

Gold Loan LTV Ratio Hike: ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் மீது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுக்கு பல்வேறு எதிர்ப்புகள் தொடர்ந்து குவிந்த நிலையில், ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்தது.
கடன் தொகை 85 சதவீதமாக உயர்வு:
இந்த நிலையில் வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா வெளியிட்டுள்ளார். இதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பு வரையிலான தங்க நகைகளுக்கு இதுவரை 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடன் பெறும் தொகை சற்று கூடுதலாக கிடைக்கும். இந்த புதிய அறிவிப்பின்படி, இதுவரை 1 லட்சம் ரூபாய்க்கு வைக்கப்படும் தங்க நகைக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் இனிமேல் 85 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் என்பது முத்தூட் ஃபைனான்ஸ் உள்ளிட்ட தனியார் தங்க நகைக்கடன் நிறுவனங்களை குறிக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தங்கநகைக்கடன் கட்டுப்பாடு:
கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கநகைக்கடன் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி, தங்க நகையை அடகு வைப்பவர்கள் அதை வட்டி கட்டி நீட்டித்து காெண்டிருக்காமல் குறிப்பிட்ட கால அளவிற்குள் மீட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏலத்திற்கு வரும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவும் இதற்கு 1 லட்சம் ரூபாய் வரை விதிவிலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது.





















