மேலும் அறிய

Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?

Eli Lilly Weight Loss Drug India: எடையை குறைக்க உதவும் ஊசி மருந்தான மௌஞ்சாரோவை, எலி லில்லி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Eli Lilly Weight Loss Drug India: எலி லில்லி நிறுவனத்தின் ஊசி மருந்தான மௌஞ்சாரோ, எடை குறைப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை குறைப்பு மருந்து அறிமுகம்:

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான எலி லில்லி அண்ட் கம்பெனி, தனது எடை இழப்பு ஊசி மருந்தான மௌஞ்சாரோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்கத்திய சந்தைகளில் ஏற்கனவே இந்த சிகிச்சை முறை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும்,  இந்தியாவிற்குள் எடை இழப்புக்கான இந்த சிகிச்சை முறை கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய டைப்-2 சர்க்கரை வியாதி ஒரு பெரிய சுகாதாரச் சுமையாக மாறி வரும் நிலையில் இந்த எடை இழப்பு மருந்து அறிமுகமாகியுள்ளது.

மருந்தின் செயல்பாடு என்ன?

உடலில் உள்ள இரண்டு முக்கியமான ஹார்மோன் பாதைகளை ஒரே நேரத்தில் குறிவைப்பதன் மூலம், உடல் பருமன் மருந்தியலில் இந்த மௌஞ்சாரோ மருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது குளுக்கோஸ் சார்ந்த இன்சுலினோட்ரோபிக் பாலிபெப்டைட் (GIP) மற்றும் குளுகோகன் போன்ற பெப்டைட்-1 (GLP-1) ஏற்பிகள் (receptors) எனப்படுவதை செயல்படுத்துகிறது. இந்த ஏற்பிகள் பசியைக் கட்டுப்படுத்தும் முக்கிய மூளைப் பகுதிகளில் உள்ளன. இவற்றை செயல்படுத்தப்படும்போது, ​​அவை பசியை அடக்கும், உணவு உட்கொள்ளலைக் குறைக்கும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கொழுப்பு நிறைவைக் குறைக்கும் மற்றும் உடல் லிப்பிட்களை பயன்படுத்தும் விதத்தை மாற்றுவது என இரட்டை விளைவை உருவாக்குகின்றன.

உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கும் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மௌஞ்சாரோவின் செயல்திறனாது, நாள்பட்ட எடை மேலாண்மைக்கான SURMOUNT-1 சோதனைகள் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான SURPASS சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்?

வாரத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை 5 மி.கி-க்கு 4,375 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,  2.5 மி.கி-க்கு 3,500 ரூபாய் ஆகவும் உள்ளது. வேதியியல் ரீதியாக டிர்செபடைட் என்று அழைக்கப்படும் மௌஞ்சாரோ, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சந்தைகளில் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளது. CDSCO அங்கீகாரத்திலிருந்து, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இந்திய நோயாளிகள் இந்த மருந்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்து வந்தனர். தற்போது அரசே அங்கீகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக குறையக்கூடும்.  மேற்கண்ட விலையின் அடிப்படையில், இந்தியாவில் நான்கு 2.5mg ஷாட்களின் மாதாந்திர விலை சுமார் ரூ.14,000 ஆகும், அதே நேரத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளில், இந்திய மதிப்பில் ரூ. 23,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும்.

சோதனை முயற்சிகள்:

கடந்த ஆண்டு  ஜுன் மாதம் இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO),  இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அங்கீகாரம் பெற்ற மௌஞ்சாரோ, மருத்துவ பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க எடை குறைப்பு பலன்களை நிரூபித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில் பங்கேற்ற பெரியவர்கள், உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்ந்த்து, 72 வாரங்களில் அதிகபட்சமாக சராசரியாக 21.8 கிலோகிராம் மற்றும் குறைந்தபட்சமாக 15.4 கிலோகிராம் எடையைக் குறைத்ததாக நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை:

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. இதுதொடர்பாக நிறுவனம் மேற்கோள் காட்டிய பல்வேறு மதிப்பீடுகளின்படி, ”இந்தியாவில் சுமார் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதுவந்த நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் போதுமான சிகிச்சையைப் பெறுவதில்லை. இந்தியாவில் வயதுவந்தோரின் உடல் பருமன் பாதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 6.5% ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட 10 கோடி பேரை பாதித்தது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலன்களும், எச்சரிக்கைகளும்:

உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம், டிஸ்லிபிடீமியா, கரோனரி இதய நோய் மற்றும் தடைசெய்யும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட உடல்நல சிக்கல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும். இந்த பிரச்னைக்கு மௌஞ்சாரோ தீர்வாக இருக்கும் என உற்பத்தி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம், உடல் பருமன் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்களின் மேற்பார்வையின்றிப் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  மருந்து யாருக்கு வேலை செய்யும், யாருக்கு வேலை செய்யாது என்ற தரவுகள் இருப்பதாகவும், அதனடிப்படியிலேயே பரிந்துரைக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களில் எடை இழப்பு பற்றி பேசும்போது, மருந்தின் அதிகபட்ச அளவை பொறுத்துக்கொள்ளக்கூடிய மக்களின் சதவீதம் 100% இல்லை.

பொறுப்பு துறப்பு: எந்தவொரு மருந்தையும் வாங்கவும், பயன்படுத்தவும் ஏபிபி நாடு பரிந்துரைப்பதில்லை. தகவல்களை பரிமாறும் நோக்கில் மட்டுமே செய்தி பகிரப்பட்டுள்ளது. எந்தவொரு மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவர்களின் ஆலோசயை பெற வேண்டியது அவசியம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
Veera Dheera Sooran: ஆக்ஷனில் ருத்ர தாண்டவம் ஆடிய சீயான் விக்ரம்! வெளியானது 'வீர தீர சூரன்' ட்ரைலர்!
Veera Dheera Sooran: ஆக்ஷனில் ருத்ர தாண்டவம் ஆடிய சீயான் விக்ரம்! வெளியானது 'வீர தீர சூரன்' ட்ரைலர்!
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Embed widget