IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Format: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வழக்கத்திற்கு மாறாக, பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு குழுக்களுக்காக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

IPL 2025 Format: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எந்த ஃபார்மெட்டில் நடைபெறும், பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2025:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளன. கிர்க்கெட் ரசிகர்களுக்கான திருவிழாவாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த போட்டிகள் தான் திகழ உள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எந்த வடிவத்தில் நடைபெற உள்ளது? போட்டிகள் எங்கெங்கு நடைபெறும்? அணிகளின் கேப்டன்கள் யார்? சாம்பியன் பட்டம் வெல்பவருக்கான பரிசுத்தொகை எவ்வளவு? போட்டிகள் எங்கு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்? என நடப்பாண்டு ஐபிஎல் தொடர்பான ஒட்டுமொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
2 குழுக்களாக பிரியும் 10 அணிகள்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
க்ரூப்-ஏ: சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
க்ரூப் - பி: மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
அணிக்கு 14 போட்டிகள்:
போட்டியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் (7 உள்ளூர் மைதானத்திலும், 7 வெளியூர் மைதானத்திலும்) விளையாடும். ஏ க்ரூப்பில் உள்ள அணிகள் தங்களுக்கிடையே இரண்டு முறை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பி க்ரூப்பில் உள்ள ஏதேனும் ஒரு அணியுடன் மட்டும் இரண்டு முறையும், மற்ற அணிகளுடன் ஒரே ஒரு முறை மட்டுமே மோதும். உதாரணமாக சென்னை அணி க்ரூப் ஏ-வில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் இரண்டு முறை மோதும். அதேநேரம், க்ரூப்-பி பிரிவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் உடன் மட்டும் இரண்டு முறையும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மட்டுமே சென்னை அணி மோதும்.
போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:
- அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம்,
- தர்மசாலா பஞ்சாப் கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானம், புதிய சண்டிகர்
- வான்கடே மைதானம், மும்பை
- எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
- ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
- நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
- எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஐதராபாத்
- பிஆர்எஸ்ஏபிவி ஏகானா மைதானம், லக்னோ
- டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்
போட்டி தொடங்கும் நேரம்:
- மாலையில் நடைபெறும் போட்டி 3.30 மணிக்கு தொடங்கும்
- இரவில் நடைபெறும் போட்டி 7.30 மணிக்கு தொடங்கும்
- ஃபைனல் உள்ளிட்ட பிளே-ஆஃப் போட்டிகள் அனைத்தும் மாலை 7.30 மணிக்கு தொடங்கும்
நேரலையில் காண்பது எப்படி?
ஐபிஎல் போட்டிகளின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலி வழியாகவும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். ஐபிஎல் தொடரின், தொடக்க நிகழ்ச்சிகள் தொடங்கி, ஒட்டுமொத்த போட்டிகளும், மேற்குறிப்பிடப்பட்ட தளங்களில் தான் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
கேப்டன்கள் யார் யார்?
- சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட்
- டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல்
- குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரகானே
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரிஷப் பண்ட்
- மும்பை இந்தியன்ஸ்: ஹார்திக் பாண்ட்யா
- பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர்
- ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் படிதார்
- சன்ரைசர்ஸ் ஐதராபாத்: பேட் கம்மின்ஸ்
பரிசுத்தொகை எவ்வளவு?
- சாம்பியன்: $2.32 மில்லியன் (சுமார் ரூ.20 கோடி)
- இரண்டாம் இடம்: $1.5 மில்லியன் (சுமார் ரூ.13 கோடி)
- மூன்றாவது இடம்: $810,800 (சுமார் ரூ.7 கோடி)
- நான்காவது இடம்: $752,894 (சுமார் ரூ.6.5 கோடி)




















