மேலும் அறிய

Movie Release : இரண்டாவது வாரத்தில் கலக்கும் மகாராஜா.. ஜூன் 21 திரையரங்கில் வெளியாகும் படங்கள் இதோ..

பார்வதி மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள உள்ளொழுக்கு முதல் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ரயில் வரை ஜூன் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்

தற்போது திரையரங்குகளில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா மற்றும் சூரியின் கருடன் உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுடன் இன்னும் சில படங்களும் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. வரும் ஜூன் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.

ரயில்

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியுள்ள படம் ரயில். எம்டன் மகன் , நான் மகான் அல்ல , வெண்ணிலா கபடிக் குழு , அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி . தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தில் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதலில் வடக்கன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்ப்புகள் வரவே ரயில் என்று டைட்டில் மாற்றப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

உள்ளொழுக்கு 

பார்வதி திருவோத்து , ஊர்வசி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாளப்  படம் உள்ளொழுக்கு. கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான டாக்குமண்டரி புனைவு Curry & Cyanide தொடரை இயக்கி கவனமீர்த்த  கிறிஸ்டோ டோமி இந்த படத்தை இயக்கியுள்ளார். சுஷின் ஷியாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பயமறியா பிரம்மை 

69 எம் எம் ஃபிலிம்ஸ்  தயாரிப்பில் ராகுல் கபாலி இயக்குநராக அறிமுகமாகும் படம் பயமறியா பிரம்மை . ஜே.டி இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். குரு சோமசுந்தரம் , ஜான் விஜய் , ஹரிஷ் உத்தமன் , வினோத் சாகர், ஜாக் ராபின்சன் , விஸ்வநாத் , சாய் பிரியங்கா ரூத் , திவ்யா கணேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நாளை ஜூன் 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது பயமறியா பிரம்மை

லாந்தர்

அறிமுக இயக்குநர் சாஜி சலிம் இயக்கத்தில் விக்ராந்த் , ஸ்வேதா டொரத்தி , விபின் , சஹானா , பசுபதி ராஜ் , உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் லாந்தர். த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எம் எஸ் பிரவீன் இசையமைத்திருக்கிறார். லாந்தர் படம் நாளை ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 நடன்ன சம்பவம்

பிஜூ மேனன் , சூரஜ் வெஞ்சரமூடு , லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் நடன்ன சம்பவம். விஷ்ணு நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜூன் 21-ஆம் தேதி, இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL LSG Vs SRH: லக்னோவின் ப்ளே ஆஃப் கனவிற்கு ஆப்பு வைத்த ஹைதராபாத் - 206-ஐ சேஸ் செய்து அசத்தல்
லக்னோவின் ப்ளே ஆஃப் கனவிற்கு ஆப்பு வைத்த ஹைதராபாத் - 206-ஐ சேஸ் செய்து அசத்தல்
IPL LSG Vs SRH: 205 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிக்குமா ஹைதராபாத்.?
205 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிக்குமா ஹைதராபாத்.?
Supreme Court: இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்
இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்
Chennai Water ATM: சென்னை மக்களே; இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம் - வருது குடிநீர் ஏடிஎம், எங்கெங்க தெரியுமா.?
சென்னை மக்களே; இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம் - வருது குடிநீர் ஏடிஎம், எங்கெங்க தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL LSG Vs SRH: லக்னோவின் ப்ளே ஆஃப் கனவிற்கு ஆப்பு வைத்த ஹைதராபாத் - 206-ஐ சேஸ் செய்து அசத்தல்
லக்னோவின் ப்ளே ஆஃப் கனவிற்கு ஆப்பு வைத்த ஹைதராபாத் - 206-ஐ சேஸ் செய்து அசத்தல்
IPL LSG Vs SRH: 205 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிக்குமா ஹைதராபாத்.?
205 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிக்குமா ஹைதராபாத்.?
Supreme Court: இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்
இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்
Chennai Water ATM: சென்னை மக்களே; இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம் - வருது குடிநீர் ஏடிஎம், எங்கெங்க தெரியுமா.?
சென்னை மக்களே; இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம் - வருது குடிநீர் ஏடிஎம், எங்கெங்க தெரியுமா.?
IPL 2025 LSG vs SRH: இறங்கி அடிக்கப்போகும் சன்ரைசர்ஸ்.. துருப்புச்சீட்டை களமிறக்கிய லக்னோ! இன்று வெற்றி யாருக்கு?
IPL 2025 LSG vs SRH: இறங்கி அடிக்கப்போகும் சன்ரைசர்ஸ்.. துருப்புச்சீட்டை களமிறக்கிய லக்னோ! இன்று வெற்றி யாருக்கு?
Rahul Questions Jaishankar: “இது ஒரு தவறு இல்லை, அது ஒரு குற்றம்“ ஜெய்சங்கரை தெறிக்கவிடும் ராகுல் காந்தி - சரமாரி கேள்வி
“இது ஒரு தவறு இல்லை, அது ஒரு குற்றம்“ ஜெய்சங்கரை தெறிக்கவிடும் ராகுல் காந்தி - சரமாரி கேள்வி
Sridhar Vembu: ’’ஈஸியாக எடுத்துக்காதீங்க; ஐ.டி. வேலைகளுக்கு ஆப்பு வைக்கும் ஏஐ’’- ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
Sridhar Vembu: ’’ஈஸியாக எடுத்துக்காதீங்க; ஐ.டி. வேலைகளுக்கு ஆப்பு வைக்கும் ஏஐ’’- ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
TN 12th Supplementary Exam: இத்தனை ஆயிரம் மாணவர்களா? சென்னையில்தான் அதிகம்- பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத வழிகாட்ட உத்தரவு!
TN 12th Supplementary Exam: இத்தனை ஆயிரம் மாணவர்களா? சென்னையில்தான் அதிகம்- பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத வழிகாட்ட உத்தரவு!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.