எதிர்நீீச்சல் சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்?.. இயக்குநருக்கு வந்த சோதனை.. ரசிகர்கள் ஷாக்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து பிரபல நடிகர் விலக இருக்கிறாராம்.

வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் மார்க்கெட் குறைந்த பின்னர் சின்னத்திரையில் கொடிகட்டி பறக்க தொடங்குவார்கள். அவர்கள் நடித்த படங்களை காட்டிலும் சீரியல்களில் நடிகர், நடிகைகளின் கதாப்பாத்திரம் பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறுகிறது. அதேபோன்று சின்னத்திரையில் அறிமுகமாகும் பலரும் மக்களின் பேரன்பை பெறுவதும் உண்டு. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு பின் காரம் குறைந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. நடிகர் வேல ராமமூர்த்தி மிரட்டியும், உருட்டி பார்த்தாலும் டிஆர்பியில் பெரிய அளவில் அடி வாங்கியது. சினிமா அளவிற்கு பரபரப்பு இல்லாமல் முதல் பாகம் முடிவை நோக்கி சென்றது. இந்நிலையில், எதிர்நீச்சல் தொடர்கிறது ஒளிபரப்பாகி டிஆர்பியிலும் முதல் ஐந்து இடத்திற்குள் இடம்பிடித்துள்ளது. பெண்கள் ஓர் அணியாக சேர்ந்து குணசேகரனின் தூக்கத்தை கெடுத்து வருகின்றனர்.
குணசேகரன், தர்ஷன்-அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என மும்முரமாக உள்ளார். அதே நேரத்தில் தர்ஷன் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். இந்த சூழலில் பெண்கள் அணி நினைத்தது நடக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே தர்ஷன்-பார்கவியை சந்தித்த விஷயம் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் நடிகர் ஒருவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்தி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சபரி. இவர் முதல் பாகத்திலேயே குணசேகரனுக்கு எதிராகவும் அண்ணன்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்த முதல் ஆளாக இருந்தார். இந்நிலையில், சக்தியாக நடித்த சபரி எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலில் இருந்து விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.





















