மேலும் அறிய
இது என்னடா புது புரளியா இருக்கு... நயன்தாரா - விக்கி இடையே புகையும் பிரச்சனை! டவுட்டை கிளப்பிய புகைப்படம்!
விக்கி மற்றும் நயன் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் நயன்தாரா தான் மட்டும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதாக புது புரளி ஒன்று கிளம்பியுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனையா
1/11

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார் நயன்தாரா.
2/11

'ஐயா' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் அறிமுகமான நயன்தாரா, அதன் பிறகு கிளாமர் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, தனுஷ் என்று மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
3/11

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
4/11

சினிமாவில் பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போதே... இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நானும் ரௌடி தான் படம் மூலமாக இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
5/11

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிக பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் Nayanthara: Beyond the Fairytale என்ற ஆவணப்படமாக வெளியானது. இதில் காதல் முதல் கல்யாணம் வரையிலான எல்லா காட்சிகளும் இடம் பெற்றது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டது.
6/11

திருமணமான 4 மாதங்களில், வாடகை தாய் மூலமாக இவர்களுக்கு உலக் மற்றும் உயிர் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர். காதல் திருமணத்திற்கு பிறகு இருவரும் ரொமான்டிக் ஜோடியாக வலம் வந்தது மட்டும் இன்றி, புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
7/11

குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை நயன்தாரா இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
8/11

காதல் மற்றும் திருமண ஜோடிகளுக்கு உதாரணமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இருந்தனர். ஆனால், அண்மை காலமாக நயன்தாரா மட்டும் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
9/11

இதன் காரணமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் பிரச்சனை புகைந்து வருவதாக ஒரு புரளி சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகிறது. அதனால் தான் நயன்தாரா மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் தகவல் பரவி வருகிறது.
10/11

உண்மையில் விக்னேஷ் சிவன் தனது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் தான் அவர் போட்டோசெஷன்களில் இடம் பெறுவதில்லை.
11/11

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நயன்தாராவிற்கு அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை விக்கி தான் நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டார். இதன் மூலம் நயன்தாரா - விக்கி இருவரும் ஹாப்பியான ஜோடிகளாகவே இருப்பது உறுதியாகி உள்ளது.
Published at : 14 May 2025 10:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















