மேலும் அறிய

ஓடிடியில் கலக்கும் புதிய சீரிஸ்...‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!  

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் நடித்துள்ள ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. 

ஓடிடியில் கலக்கும் சட்டமும் நீதியும்  

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. 

உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இந்நிகழ்வினில் 

“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது… 

எல்லோருக்குமே மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இந்த சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீங்கள் தான் இந்த சீரிஸை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார். இந்த சீரிஸ் நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவருக்கான அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மாதிரி தொடர்ந்து பல படைப்புகளை தயாரிக்க வேண்டும். இந்த குழுவில் எல்லோருமே கடின உழைப்பை தந்துள்ளார்கள். சரவணன் சார் அசத்திவிட்டார். நம்ரிதா எங்கள் அழகி, க்யூட்டான ஹீரோயின், புராஜக்டுக்கான தேவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக செய்துள்ளீர்கள். கேப்டன் பாலாஜி செல்வராஜ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அவர் புரடியூசருக்கான டைரக்டர். 14 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அவர் கடின உழைப்பாளி. இவர்களின் உழைப்புக்கான பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை மக்களிடம் சேர்த்த ZEE5க்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 

“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன்  பேசியதாவது… 

எங்கள் டீம், சரவணன் அண்ணன், இந்த முழு வெப் சீரிஸை, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது தெலுங்கு இந்தியிலும் இது டப்பாகி கொண்டிருக்கிறது. சரவணன் அண்ணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார் நன்றி. நம்ரிதா அருமையாகச் செய்துவிட்டார். ஆர்ட் டைரக்டர் பாவனா இதில் ஒரு செட் கூட செட் எனச் சொல்ல முடியாத படி, அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் பாலாஜியும் நானும்  நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் 14 நாட்களில் மொத்த சீரிஸையும் முடித்துத் தந்தார். அந்தளவு கடினமான உழைப்பாளி. மியூசிக் டைரக்டர் நீங்கள் தந்த இசைக்கு நன்றி. இந்த சீரிஸுற்கு முழுக்காரணமாக இருந்த என் மனைவிக்கு நன்றி. நான் சினிமா ஆசையில் வந்தவன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ZEE5க்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய பத்திரிக்கை ஊடக நண்பர்க்கு நன்றி. 

நடிகர் சரவணன் பேசியதாவது… 

எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி. 

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது… 

பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி. 

நடிகை நம்ரிதா  பேசியதாவது..

மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி. 

காஸ்ட்யூம் டிசைனர் மரியா பேசியதாவது..,
அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லையென்றால் இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்க முடியாது. என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த சசிகலா மற்றும் பிரபாகரன், இயக்குநர் பாலாஜி ஆகியோருக்கு  நன்றி 

ஆர்ட் டைரக்டர் பாவனா பேசியதாவது..,
என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. என் குருவுக்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி

எடிட்டர் ராவணன் பேசியதாவது..,
என்னை நம்பிய இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. நல்ல சீரிஸை பாராட்டிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர்  பேசியதாவது..,
என் குரு ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், எங்களுக்கு முழு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. சரவணன் சார், நம்ரிதா கலக்கி விட்டார்கள். தயாரிப்பாளர் பிரபாகரன் சாருக்கு நன்றி. என் நண்பர் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. 

ஒளிப்பதிவாளர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது..,
இந்த புராஜக்ட் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. இதை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 

நடிகர் அரோல் D சங்கர் பேசியதாவது..,
விடியும் முன் படத்திலிருந்து இயக்குநர் பாலாஜியைத் தெரியும். அங்கு ஆரம்பித்த பயணம், இங்கு வரை வந்தது மகிழ்ச்சி. பிரபாகரன் அவரை முதலில் அஸிஸ்டெண்ட் என நினைத்தேன். அண்ணா அண்ணா என அழைப்பா,ர் அவர் தான் தயாரிப்பாளர் என்றவுடன் நான் சார் என அழைக்க ஆரம்பித்துவிட்டேன். கடினமான உழைப்பாளி. நல்ல நடிகராக வரக்கூடியவர். நம்ரிதா ஹீரோயின் போலவே இருக்க மாட்டார். இயல்பாக இருப்பார். அழகாக நடித்துள்ளார். சரவணன் சார் இது பத்தாது, இன்னும் பெரிய அளவில் உங்களிடம் சண்டை போட வேண்டும், இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். இந்த சீரிஸை பாராட்டி மக்களிடம் சேர்த்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 

நடிகர் குப்புசாமி பேசியதாவது… 
எல்லோருக்கும் வணக்கம், நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகது, ரிலீஸானால் ஓடாது. நான் முதலில் நடித்த படம் சட்டம் என் கையில், 34 வருட உழைப்புக்குப் பலனாக இந்த வெற்றி வந்துள்ளது. சட்டமும் நீதியும் எனக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சூரி அண்ணா இயக்குநர் பாலாஜி சார் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.  மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வது பெரும் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்குத் துணையிருந்த அனைவருக்கும் நன்றி. 

நடிகர் சௌந்தர் பேசியதாவது… 
தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

சட்டமும் நீதியும் சீரிஸில்  நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

சட்டமும் நீதியும் சீரிஸை  ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டுகளியுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget