IPL 2025 LSG vs SRH: இறங்கி அடிக்கப்போகும் சன்ரைசர்ஸ்.. துருப்புச்சீட்டை களமிறக்கிய லக்னோ! இன்று வெற்றி யாருக்கு?
IPL 2025 SRH vs LSG: ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி முதலில் பேட் செய்கிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், லக்னோவில் உள்ள வாஜ்பாயி மைதானத்தில் நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இமாலய இலக்கை நிர்ணயிக்குமா லக்னோ?
சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், லக்னோ அணிக்கு ப்ளே ஆஃப் சற்றே துடிப்புடன் உள்ளது. இந்த சூழலில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
ப்ளேயிங் லெவன்:
மிட்செல் மார்ஷ், மார்க்ரம், பூரண், ரிஷப்பண்ட், பதோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், ஆவேஷ்கான், பிஷ்னோய், திக்வேஷ் ரதி, வில்லியம் ஓரோர்க்கி லக்னோ அணிக்காக களமிறங்குகின்றனர்.
பாட் கம்மின்ஸ் தலைமையில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார், கிளாசென், அனிகெத் வர்மா, மென்டிஸ், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, ஈஷன் மலிங்கா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
பேட்டிங் பலம்:
லக்னோ அணிக்காக மார்ஷ் - மார்க்ரம் ஜோடி அதிரடி தொடக்கம் அளித்தால் லக்னோ நல்ல ஸ்கோரை எட்டும். பூரண் ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம். கேப்டன் ரிஷப்பண்ட் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடவில்லை. அவரது பேட்டிங் அணிக்கு மிகவும் அவசியம் ஆகும். பதோனி, சமத் பின்வரிசையில் அசத்தினால் லக்னோ சிறப்பான இலக்கை சன்ரைசர்ஸ்க்கு நிர்ணயிக்கும்.
ஹைதரபாத் அணியின் அபிஷேக் சர்மா, இஷான்கிஷான், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா அபாரமாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இவர்கள் சிறப்பாக இணைந்து பேட்டிங்கில் அசத்தினால் ஹைதரபாத் வலுவான இலக்கை எட்டும்.
பந்துவீச்சு:
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் சிறப்பாக பந்துவீசும் அணி வெற்றி பெறும். சன்ரைசர்ஸ் அணியில் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே பந்துவீச்சில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும். ஜீசன் அன்சாரி, ஈஷன் மலிங்கா சிறப்பாக வீசினால் லக்னோவை கட்டுப்படுத்தலாம்.
லக்னோ அணியைப் பொறுத்தவரையில் ஆகாஷ் தீப், ஆவேஷ்கான் சிறப்பாக பந்துவீசினால் ஹைதரபாத் இலக்கை எட்டவிடாமல் தடுக்கலாம். பிஷ்னோய், திக்வேஷ் சிங் ரதி சுழலில் மிரட்ட வேண்டியது அவசியம். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓரோர்க்கி பந்துவீச்சில் பக்கபலமாக இருந்தால் லக்னோ வெற்றி பெறும்.
இந்த போட்டியின் முடிவு சன்ரைசர்ஸ்க்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் அவர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.




















