Nazriya Fahaadh Wedding : 8 வருஷமாகிடுச்சு.. திருமண நாளில் க்யூட் வீடியோ வெளியிட்ட நஸ்ரியா!
திருமணமாகி 8ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா!
மலையாளம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக இருந்து, தமிழ் சினிமாவில் ‘நேரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் நஸ்ரியா. முதல் படம் முதலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் பிறகு ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ போன்ற சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். இவரும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் காதலித்து 21 ஆகஸ்ட் 2014 அன்று திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்றது. ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்யும் போது அவரை விட நஸ்ரியா 12 வயது சிறியவர். அப்போது நஸ்ரியாவை தங்கள் படத்தில் கமிட் செய்ய ஏகப்பட்ட இயக்குநர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து நஸ்ரியா ப்ரேக் எடுத்துக்கொண்டார்.
View this post on Instagram
இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதில் நஸ்ரியா,“ 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இதுவரைக்கும் ஒரு அருமையான ரைடாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
ஃபகத் ஃபாசில் சமீபத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘விக்ரம்’படத்தில் நடித்தார். சமீபத்தில் ’அந்தே சுந்தராணிகி’ படத்தின் மூலம் நானிக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமானார் நஸ்ரியா நசீம். இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற தலைப்பில் தமிழில் டப் செய்யப்பட்டது.